ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தை சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார்.


அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் Laikipia என்ற இடத்தில் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்தார். இது குறித்து தகவலறிந்த அவர் சில இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தினார்.


அப்போது ஒரு நாள் பவுர்ணமி வெளிச்சத்தில் கேமராவின் குறுக்கே சென்ற கருஞ்சிறுத்தை கேமராவுக்குள் சிறைபிடிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.