ரூபாய் நோட்டு அளவு மீண்டும் மீண்டும் மாற்றுவதால் கோபமடைந்த நீதிமன்றம்
நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களின் அளவை அடிக்கடி மாற்றுவதன் மூலம் பார்வையற்றோர்களுக்கு சிரமம் ஏற்ப்படுகிறது.
புதுடெல்லி: நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களின் அளவை அடிக்கடி மாற்றுவதன் மூலம் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? இந்த உங்களுக்கு மட்டுமல்ல. இத்தகைய பிரச்சினையை ஏராளமானோர் எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக, மும்பை உயர் நீதிமன்றம் ரிசர்வ் வங்கியை கண்டித்துள்ளது.
நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களின் அளவை அடிக்கடி மாற்றுவதன் மூலம் எங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என பார்வையற்றோர் சங்கம் ஒரு வழக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்தராஜோக் மற்றும் நீதிபதி பாரதி டாங்க்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்பொழுது ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களின் அளவை மீண்டும் மீண்டும் மாற்ற வேண்டிய கட்டாயம் என்ன? ரிசர்வ் வங்கி தனது அதிகாரங்களை மக்கள் பாதிக்கக்கூடிய வகையில் பயன்படுத்த முடியாது. ஒரு ரூபாய் நோட்டு ஏன் புழக்கத்தில் விடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் குறைந்தபட்சம் நாணயத்தாள்களின் அளவு எதிர்காலத்தில் மாற்றப்படாது என்றாவது உத்தரவாதம் கொடுங்கள் என நீதிபதிகள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கியின் ஆலோசகர், இதுக்குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதைக்கண்டித்த நீதிமன்றம், இன்னும் எத்தனை கால அவகாசம் வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கால அவகாசம் வழங்கப்பட்டது. மீண்டும் கால அவகாசம் கேட்பது முறையா? என நீதிபதிகள் ரிசர்வ் வங்கியை கண்டித்தனர்.