திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர், உறவினர்களிடம் மணமகள் நுழைவுக் கட்டணம் வசூலித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... அதுவும், இந்திய திருமணம்  என்றாலே வண்ணமயமான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது திருமண நாள் மறக்க முடியாத அற்புதமான நிகழ்வாக அவர்களின் மனதில் பதிந்திருக்கும். இந்நிலையில், அமெரிக்காவில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர், உறவினர்களிடம் மணமகள் நுழைவுக் கட்டணம் வசூலித்த நிகழ்வு நடந்துள்ளது.


திருமணத்தில் கலந்துகொள்ளும் உறவினர்கள், நண்பர்கள் 50 டாலர்கள் (இந்திய மதிப்புபடி 3500 ரூபாய்) வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார் மணமகள். நுழைவுக் கட்டணம் செலுத்துவோருக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும் என்றும் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களை பிரத்யேக விருந்தினர்களாக உபசரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவத்தில் மணமகளின் உறவினர் விஷயம் தெரியாமல் சென்றுள்ளார். பின் அவரை நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். பின் மணமகளின் பெற்றோர் பணத்தைக் கொடுக்க முன் வந்தபோதும் அவர்களை மணமகள் தடுத்துள்ளார். பின் அந்த உறவினரின் பெற்றோருக்கே தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி பணம் செலுத்தச் சொல்லியுள்ளார். இப்படி மணமகள் மிகவும் கராராக நடந்து கொண்டதால் சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.


என்ன காரணம் என்று விசாரித்தபோது மணமகள் திருமணச் செலவுகளை ஈடு செய்யவே இவ்வாறு செய்துள்ளார். இதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.