லண்டனை மையமாக கொண்டு இயங்கும் வெர்ஜின் அட்லாண்டிகா விமான சேவை வரும் அக்டோபர் மாதம் முதல் மும்பை நகருக்கு நேரடி விமான சேவையை விரிவு செய்ய முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டிஸ் விமான சேவையான வெர்ஜின் அட்லாண்டிகா தற்போது லண்டன் - புதுடெல்லி தினசரி விமான சேவையினை நடைமுறை படுத்தி வருகிறது. இந்நிலையில் வரும் 27 முதல் லண்டன் - மும்பை வழித்தடத்திலும் புதிய விமான சேவையினை துவங்க முடிவு செய்துள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் வரும் மே 28-ஆம் தேதி துவங்கி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மும்பை - லண்டன் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள விமானமானது 258 இருக்கைகள் கொண்ட விமானமாக இருக்கும் எனவும், இதில் பிஸ்னஸ் பிரிவில் 31 இருக்கைகளும், ப்ரீமியம் பிரிவில் 35 இருக்கைகளும், எக்கானமி பிரிவில் 192 இருக்கைகளும் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெர்ஜின் அட்லாண்டிகவின் செயல் துணை தலைவர் ஜூவா ஜார்வினென் தெரிவிக்கையில்., "வெர்ஜின் அட்லாண்டிகா ஆனது 2019-ஆம் ஆண்டு கனிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது வெர்ஜினின் சேவையினை விரிவு படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன் காரணமாக தற்போது லண்டன் - மும்பை வழித்தடத்தில் புதியதொரு விமான சேவையினை அறிமுகம் செய்ய வெர்ஜின் முடிவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.


முன்னாதக டெல்டா ஏர்லைன்ஸ் கூட்டுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மும்பை - லண்டன் வழித்தடத்தில் விமான சேவைகளை செயல்படுத்தி வந்த இந்நிறுவனம் பின்னர் 2009-ஆம் ஆண்டு நிதிச்சுமை காரணமாக லண்டன் - மும்மை சேவையினை நிறுத்தியது. பின்னர் மீண்டும் 2012 துவங்கி 2015-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து லண்டன் - மும்பை வழிதட விமான சேவை நிறுவன மேம்படுத்தல் காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையி தற்போது மீண்டும் லண்டன் - மும்பை வழித்தடத்தில் விமான சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.