Budget 2021: 1950 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வருமான வரி எவ்வளவு தெரியுமா?
வரிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அனைத்து காலங்களிலும் வரி என்பது இருந்திருக்கின்றது.
வருமான வரி என்பது எப்போதுமே விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். எவ்வளவு வரி விதிக்க வேண்டும், எது சரியான வரி என்பதை நாட்டிலோ அல்லது உலகத்திலோ யாரும் சரியாக நிர்ணயிக்க முடியாது. வரிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அனைத்து காலங்களிலும் வரி என்பது இருந்திருக்கின்றது.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவில் (India) முதல் முறையாக 1949-50 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த பட்ஜெட்டுக்கு முன்பு, 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் 1 பைசா அல்லது 4 பைசா வரி செலுத்த வேண்டியிருந்தது.
பின்னர் இது குறைக்கப்பட்டு, 10,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 3 பைசா என்று நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், ரூ .10,000 க்கு மேல் உள்ள வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி 2 அணாவிலிருந்து குறைக்கப்பட்டு 1.9 அணா ஆக்கப்பட்டது.
1950 ஆம் ஆண்டில், ரூ .1,500 வரையிலான வருமானத்திற்கு வருமான வரி (Income Tax) விதிக்கப்படவில்லை. ரூ .1,501 முதல் 5,000 வரையிலான வருமானத்திற்கு 4.69 சதவீத வருமான வரி செலுத்த வேண்டியிருந்தது. ரூ .5,001 முதல் ரூ .10,000 வரையிலான வருமானம் உள்ளவர்கள் ஒரு அணா 9 பைசா செலுத்த வேண்டும், அதாவது 10.94 சதவீத வருமான வரி.
வருமானம் ரூ .10,001 முதல் ரூ .15,000 வரை இருந்தால், அவர்கள் 21.88 சதவீத வருமான வரி செலுத்த வேண்டியிருந்தது. ரூ .15,001 க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 31.25% வரி செலுத்த வேண்டியிருந்தது. இதன் பின்னர், 1955 இல் வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
ALSO READ: Budget 2021: சாமானியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? எது விலை குறையும், எது கூடும்?
தற்போதைய வருமான வரி என்ன?
தற்போதைய வருமான வரி விதிகளின்(Interest Rate) படி, ரூ .2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ .2.5 லட்சம் முதல் ரூ .5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 5% வருமான வரி செலுத்த வேண்டும். வருமானம் ரூ .5 லட்சம் முதல் ரூ .7.5 லட்சம் வரை உள்ளவர்கள் 10% வருமான வரி செலுத்த வேண்டும். யாருடைய வருமானம் ரூ .7.5 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை உள்ளதோ, அவர்கள் 15% வருமான வரி செலுத்த வேண்டும்.
வருமானம் ரூ .10 லட்சம் முதல் ரூ .12.5 லட்சம் வரை இருந்தால், அவர்கள் வருமான வரியாக 20% செலுத்த வேண்டும். ரூ .12.5 லட்சம் முதல் ரூ .15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 25% வருமான வரி செலுத்த வேண்டும். ரூ .15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.
வருமான வரி என்றால் என்ன?
உங்கள் வருடாந்திர வருமானத்தில் மத்திய அரசு வசூலிக்கும் வரி வருமான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நபரின் வருமானத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விகிதங்களில் இது வசூலிக்கப்படுகிறது. இந்த வருமான வரி வணிக நிறுவனங்களுக்கு பெருநிறுவன வரியாக வசூலிக்கப்படுகிறது.
ALSO READ: Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR