முதலில் அடிப்படை வசதி! பிறகு தான் புல்லட் ரயில் அமைப்பு!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் அளிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பால்கர் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. 17 பில்லியல் டாலர் மதிப்பீட்டில் உருவாகிவருகிறது இந்த புல்லட் ரயில்.
இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பொதுமக்கள் புல்லட் ரயிலில் பயணிக்க வெறும் ரூ.3000 செலுத்தினால் போதுமானது.
அதன்படி பாந்த்ரா-குரள் பகுதியில் இருந்து தானே வரை பயணிக்க ரூ.250 என துவங்கி, மும்பை-அகமதாபாத் வரை ரூ.3000 வரை வசூளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டப் பணிகள், வரும் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறினால், மும்பையில் இருந்து 508-km தொலைவில் உள்ள ஆகமதாபாத் நகருக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புல்லட் ரயில், மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாதில் உள்ள சபர்மதி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் பாதையில் 110 கீமீ தூரத்துக்கு மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இருந்து நிலம் கையகப்படுத்த உள்ளது.
இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் 22 கிராம மக்கள் நிலம் அளிக்க மறுத்துள்ளனர். அதே நேரத்தில் 50 கிராம மக்கள் ஒரு சில பொது கோரிக்கைகளுடன் நிலம் அளிக்க முன் வந்துள்ளனர். அவை, அடிப்படை வசதிகளான தெரு விளக்குகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சுற்றுச் சுவர் கட்டித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.