ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. கிரகத்தின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமையும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 31 ஆம் தேதி, சுக்கிரன் கிரகம் சனியின் ராசியான கும்ப ராசி-யில் நுழையப் போகிறது. சுக்கிரனின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை அடையப் போகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, செல்வம், அழகு, ஐஸ்வர்யம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறது.


மார்ச் 31ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்நாளில் காலை 8.54 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். மேலும் கும்பத்தை ஆளும் கிரகம் சனி பகவான். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


மேஷம்


ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்கு 11ம் ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நடக்க உள்ளது. 11வது ஸ்தானம் வருமானத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 


வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வருமானம் உருவாகும். அதே சமயம், கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் வியாபாரமும் பெற்றி அடையும். மேலும் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 


கும்பம்


இந்த ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செல்வத்தின் காரணியான சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசியில் நடக்கப் போகிறது. ஆகையால், இந்த காலத்தில், கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். மேலும் வியாபாரத்திலும் பணி இடத்திலும் அதிகப்படியான பண வரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கும்பத்தை ஆளும் கிரகம் சனி தேவன். சுக்ரனுடன் சனி பகவான் நட்பு உணர்வை கொண்டிருப்பது நல்ல பலன்களைத்  தரும். 


மகரம்


மகர ராசி-யில் சுக்கிரனின் சஞ்சாரம் இரண்டாம் ஸ்தானத்தில் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இரண்டாவது வீடு பணம் மற்றும் பேச்சுக்கான வீடாகும். இந்த மாற்றத்தின் மூலம் பண வரவு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனி பகவான் மகர ராசிக்கும் அதிபதி ஆவார். சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையிலான நட்பு உணர்வு காரணமாக, இந்த சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு பலனளிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர கடவுளின் ஸ்பெஷல் ஆசி - செல்வம் பெருகும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR