புதுடெல்லி: ஜூன் 21 முதல், நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தும். இந்த மெகா அறிவிப்புக்குப் பிறகு, தடுப்பூசி தொடர்பான அரசாங்கத்தின் பிரச்சாரம் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சில பொதுத்துறை வங்கிகள் தடுப்பூசி பற்றி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்த சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன. உதாரணமாக, நீங்கள் தடுப்பூசி டோசை செலுத்திக்கொண்டால், உங்கள் நிலையான வைப்புத் தொகையில் (Fixed Deposit) அதிக வட்டி கிடைக்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசி போடுங்கள், அதிக வட்டி பெறுங்கள்


கொரோனா தடுப்பூசியை (Corona Vaccination) ஊக்குவிப்பதற்காக சில பொதுத்துறை வங்கிகள் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கியுள்ளன. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் வைப்புத்தொகையில் அதிக வட்டி விகிதங்களைப் பெற விரும்பினால், தடுப்பூசியின் ஒரு டோசையாவது செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.


யூகோ வங்கியின் சலுகை


கொல்கத்தாவை தளமாகக் கொண்ட யுகோ வங்கி (UCO Bank) வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வழங்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட் தடுப்பூசியின் ஒரு டோசையாவது செலுத்திக்கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 999 நாட்களுக்கான  FD-களில் 30 அடிப்படை புள்ளிகள் (30 Basis Points) அல்லது 0.30 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குவதாக யுகோ வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்காக யூகோ வங்கி UCOVAXI-999 என்ற சலுகையை வழங்குகிறது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அதாவது செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும்.


ALSO READ: COVID-19 Vaccine: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்


Central Bank of India-வும் சலுகை வழங்கியுள்ளது


முன்னதாக, பொதுத்துறை வங்கியான மத்திய வங்கியும் (Central Bank of India) இத்தகைய சலுகையை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், இந்திய மத்திய வங்கி நோயெதிர்ப்பு இந்தியா வைப்புத் திட்டத்தை (Immune India Deposit Scheme) அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் தடுப்பூசி டோசை செலுத்திக்கொண்டவர்களுக்கு தற்போதைய விகிதங்களை விட 25 அடிப்படை புள்ளிகள் (25 Basis Points) அதாவது 0.25 சதவீத அதிக வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 1111 நாட்களாகும்.


கொரோனா தொற்றில் பெரிய நிவாரணம்


சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, திங்கள்கிழமை வரை, நாட்டில் 23.59 கோடி மக்களுக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பலவீனமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்திற்கும் குறைவானோரே கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயால் 86,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,00,636 ஆக இருந்தது. திங்களன்று 24 மணி நேரத்தில் 1,82,282 நோயாளிகள் கொரோனா தொற்று சிகிச்சைப் பெற்று குணமாகி வீடு திரும்பியதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ALSO READ: குறைந்து வரும் கொரோனா இரண்டாவது அலை; புதிய பாதிப்பு 86,498


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR