இணையத்தை கலக்கும் மின்சாரம் தாக்கிய பூனையின் புகைப்படம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். 


பெரும் பாலும் மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக பல ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை நாம் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவளைதலத்தில் பதிவிட்டும் வருவதும் வழக்கம். இந்நிலையில், தனது பூனை செய்த குறும்புத்தனத்தை புகைப்படம் எடுத்து ஒரு பெண் சமூகவலதலத்தில் பதிவிட்ட புகைப்படங்கல் வைரலாக பரவி வருகிறது. 


அந்த பதிவில் அந்த பூனை வீட்டில் இருந்த சுவிட்ச் பாக்ஸிற்குள் தலையை விட்டுள்ளது. அப்பொழுது குறைந்த அளவிலான மின்சாரம் அந்த பூனையின் மீது பாய்ந்துள்ளது. இதையடுத்து, அந்த பூனையின் தலை ஒட்டறை குச்சியின் மேற்புறத்தை போன்று தலை குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டுள்ளது. அந்த புகைப்படத்தை அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 



குறைவான மின்சாரம் பாய்ந்ததால் அதிஷ்டவசமாக இந்த பூனை உயிர் தப்பியிருந்தாலும், அதன் முடிகள் எல்லாம் நீட்டிக்கொண்டது. இந்த புகைப்படம் தற்போது சமூகவ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு பலரும் தங்களின் நகைச்சுவையான கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துக்களில் சில கீழே இணைக்கப்பட்டுள்ளது.