மத்திய கல்வி வாரியம்(CBSE) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி வகுப்பு 9 மற்றும் 11 பாடத்திட்டத்திலிருந்து முறையே ஆங்கில கம்யூனிகேட்டிவ் மற்றும் ஆங்கிலத் தேர்ந்தெடுப்பு பாடங்களை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் கல்வியாண்டு (2018-19) முதல், கீழ்காணும் பாடங்கள் கல்வித்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


9 வகுப்பு கல்விதிட்டத்தில் இருந்த நீக்கப்பட்டுள்ள பாடங்கள்...


  • English Communicative (code 101)

  • Information and Communication Technology (code 166)

  • e-Publishing and e-Office (code 354 & 454)


11 வகுப்பு கல்விதிட்டத்தில் இருந்த நீக்கப்பட்டுள்ள பாடங்கள்...


  • Dance - Mohiniyattam (code 062)

  • Multimedia and Web Technology (code 067)

  • English Elective CBSE (code 101)


அதே வேலையில் கீழ்காணும் பாடப்பிரிவுகள், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு (2018-19) முதல் தொழிற்முறை தேர்வு பாடமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


  • Agriculture (code 068)

  • Fashion Studies (code 053)

  • Mass Media Studies (code 072)


இதேப்போல் Sanskrit Communicative' (code 122) ஆனது Sanskrit' (code 122) எனவும், 'Foundations of Information Technology' (code 165) ஆனது 'Computer Applications' (code 165) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது!