புதுடெல்லி: ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதற்காக செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் மத்திய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதில்களை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், இணையமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்து வருகின்றனர்.


ரேஷன் அட்டை தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை (Consumer Affairs, Food and Public Distribution) இணை அமைச்சார் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.


அதில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று அந்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | ரேஷன் அட்டையில் பயோமெட்ரிக் முறையை தற்போது மீண்டும் தொடங்கியது சரியா?


இது தொடர்பாக மேலதிக தகவல்களையும் அந்த பதிலில் இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அதன்படி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு 6,317.64 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்துக்கு 3,993.80 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.


நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு 1,169.38 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 1,276.03 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.


ஆதார் அட்டையுடன் ஆவணங்களை இணைப்பதற்கான நடவடிக்கையில் ஒரு பகுதியாக, ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மிகவும் பழமையான அந்த சான்றை, ஆதார் எண்ணுடன் இணைப்பது மோசடிகளைத் தடுக்கும் என்று அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை ஆன்லைனிலும் இணைக்கலாம். நேரடியாக அலுவலகத்திற்கு சென்று ஆஃப்லைனிலும் இணைக்கலாம்.


Also Read | ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க சுலபமான வழிமுறைகள் இவை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR