ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய செயல்முறை இதோ
பிஎம் கிசானுக்கான இ-கேஒய்சியாக இருந்தாலும் சரி அல்லது இ-ஷ்ரமுக்கான பதிவாக இருந்தாலும் சரி அல்லது ஏதேனும் அரசாங்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பினாலும் சரி முதலில் ஆதார் கார்டு தான் கேட்கப்படும்.
பிஎம் கிசானுக்கான இ-கேஒய்சி அல்லது இ-ஷ்ரமுக்கான பதிவேடு அல்லது ஏதேனும் அரசாங்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால், முதலில் ஆதார் அட்டை கேட்கப்படும். ஆதாரில் பெயர், மொபைல் எண் அல்லது முகவரி தவறாக எழுதப்பட்டதால், பெரும்பாலான மக்களால் பலன் பெற முடிவதில்லை.
ஒவ்வொரு குடிமகனின் அடையாளத்திற்காகவும் இந்திய அரசு வழங்கியுள்ள ஆவணம் ஆதார் அட்டை. இதில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் டேட்டா, டெமோகிராபிக் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இது நமது அன்றாட பணிகளில் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. வங்கி பணப் பரிவர்த்தனை, சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல், பிறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆதாரில் எந்த வகையான புதுப்பிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே யுஐடிஏஐ இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | உடனடியாக ரேஷன் கார்டில் இந்த அப்டேட் செய்யுங்கள், இல்லையெனில்
அதன்படி ஆதார் வழங்கும் ஆணையமான யுஐடிஏஐ, தற்போது ஆதார் பதிவு இலவசம் என ட்வீட் செய்துள்ளது.
ஆதாரில் ஏதேனும் டெமோகிராஃபிக் அப்டேடுக்கு ரூ.50 மற்றும் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு ரூ.100 ஆகும். உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா எண்ணான 1947 அல்லது help@uidai.gov.in என்ற எண்ணிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இப்போது டெமோகிராஃபிக் அப்டேட் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட் என்றால் என்ன தெரியுமா?
ஆதார் பதிவு முற்றிலும் இலவசம். அதே நேரத்தில், குழந்தைகளுக்கு தேவையான பயோமெட்ரிக் புதுப்பிப்புகளும் இலவசம். டெமோகிராஃபிக் அப்டேட்டைப் பொறுத்த வரையில், இதில் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், இ-மெயில் அப்டேட் ஆகியவற்றுக்கு 50 ரூபாய் ஆகும்.
பயோமெட்ரிக் அப்டேட்டில் உங்கள் கைரேகைகள், புகைப்படம் மற்றும் கருவிழி ஆகியவற்றைப் புதுப்பித்து ரூ. 100 வசூலிக்கப்படும். பயோமெட்ரிக் மற்றும் டெமோகிராஃபிக் புதுப்பிப்புகள் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். இதற்கு, 150 ரூபாய்க்கு பதிலாக, 100 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். ஆதார் சேவைகளுக்கான கட்டணம் ஜம்மு முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் அசாம் வரையிலும் ஒரே மாதிரியாக உள்ளது. இதற்கு மேல் வசூலிக்கப்பட்டால் கண்டிப்பாக புகார் அளிக்க யுஐடிஏஐ வழியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR