இணையதளங்கள் நமக்கு பல வகைகளில் உதவிகரமாக இருக்கின்றது இருப்பினும் இணையதளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது.  வாட்ஸ் அப் பிரபலமான செயலியாக இருந்து வருகிறது, கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், இதன் மூலம் ஹேக்கர்கள் அவர்களின் கைவரிசையை காட்டி வருகின்றனர்.  வாட்ஸ் அப் மூலமே பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, அதனால் சில சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களை சில பாதுகாப்பான அம்சங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.  வாட்ஸ் அப்பில் நீங்கள் எவ்வித மோசடியிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய முக்கியமான அம்சங்களுள் ஒன்று டூ-ஸ்டேப்-வெரிஃபிகேஷன், இதனை செய்வதன் மூலம் நீங்கள் மோசடியில் சிக்குவதற்கான வாய்ப்பு மிக குறைவு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!



வாட்ஸ் அப்பில் டூ-ஸ்டேப் வெரிஃபிகேஷன் செய்யும் முறை :


1) முதலில் வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸை திறக்க வேண்டும்.


2) பின்னர் அதில் அக்கவுண்ட் என்பதை க்ளிக் செய்து டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்பதை க்ளிக் செய்யவும்.


3) இதனை ஆக்டிவேட் செய்ததும், உங்கள் விருப்பப்படி 6 டிஜிட் பின் நம்பரை உள்ளிடவும்.


4) செயலிலுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை சேர்க்க வேண்டும் அப்படி மின்னஞ்சல் முகவரியை சேர்க்க  விரும்பவில்லை என்றால் ஸ்கிப் என்பதை க்ளிக் செய்துவிட வேண்டும்.


5) மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து 'சேவ்' அல்லது 'டன்' என்பதை க்ளிக் செய்யவேண்டும்.


6) ஹேக்கர்கள் உங்கள் கணக்கை திருடுவதை தடுக்கும் பாதுகாவலனாக இது பயன்படும்.


இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்முறையை தவிர்த்து ஸ்க்ரீன் லாக் மற்றும் வாட்ஸ் அப் செட்டிங்கிலிருந்து ரீட் ரெசிப்ட்ஸ் என்பதை ஆஃப் செய்து வைக்கும்படி சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.  நீங்கள் அடிக்கடி ஸ்மார்ட்போனை அடிக்கடி அப்டேட் செய்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்த பிறகு நீங்கள் ஸ்க்ரீன் லாக் போட்டு வைக்க வேண்டியது அவசியம்.  ஏதேனும் பிழைகள் அல்லது மால்வேர்களை சரிசெய்ய உங்கள் சாதனத்தில் சாஃப்ட்வெர்களை அப்டேட் செய்யவேண்டும்.


மேலும் படிக்க | 64 எம்பி கேமரா, பட்டாஸான பேட்டரி கொண்ட ரியல்மீ போன்; இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ