இணையத்தை கலக்கும் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே ஹார்லி டேவிட்சனை ஓட்ட முயற்சிக்கும் புகைப்படம் வைரலாகி வெறுக்கிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேக்கு (64 வயது) சிறு வயதிலிருந்தே புல்லட்கள் மீது அளவுகடந்த பிரியம் உண்டு. கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பாப்டே பொறுப்பேற்றார். நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னரும் பல பேட்டிகளில், பைக்குகள் மீதான தன் காதல் குறித்து பாப்டே சொன்னதும் உண்டு. நாக்பூரில் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் சொந்தமாக பைக் வைத்திருந்தையும் ஒரு விபத்துக்கு பிறகு, அதை ஓட்டுவதில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.  


கொரோனா காலத்தில் சொந்த ஊரான நாக்பூரில் தற்போது அவர் விடுமுறையை கழித்து வருகிறார். நேற்று பாப்டே , ஹார்லி டேவிட்ஸன் CVO 2020 ரக பைக்கை ஒட்டுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹார்லி டேவிட்ஸன் பைக் டீலர் ஒருவர், இந்த பைக்கை அவரிடத்தில் டெமோ காட்டுவதற்காக கொண்டு வந்துள்ளார். புகைப்படம் வைரலானதை தொடர்ந்து , 'தலைமை நீதிபதியே ஹெல்மட் இல்லாமல் பைக் ஓட்டலாமா' என்கிற விமர்சனத்தையும் சிலர் முன்வைத்தனர். இதையடுத்து, தலைமைநீதிபதி பைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார். ஆனால், அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



ஜூன் 28 அன்று இந்த புகைப்படத்தை பாரண்ட்பெஞ்ச் என்ற ட்விட்டர் பக்கம் ட்வீட் செய்துள்ளது.... 'இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்சனுடன். 'இது ஹார்லி டேவிட்சனின் லிமிடெட் எடிஷன் CVO 2020. இதையடுத்து, இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இந்த ட்வீட்டுக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும், 500 க்கும் மேற்பட்ட மறு ட்வீட்டுகளும் கிடைத்துள்ளன. இந்த புகைப்படத்தைப் பகிரும்போது, பலர் தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.


READ | தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்வு...


அயோத்தி கோயில் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளின் அமர்வுகளில் பாப்டே இடம் பெற்றுள்ளார்.  நீதிபதி சரத் அரவிந்த் போப்டே நவம்பர் 18 அன்று உச்சநீதிமன்றத்தின் 47 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 23 ஏப்ரல் 2021 வரை.