#ChocolateDay2020: உங்கள் காதலி/காதலனை அசத்த சில யோசனைகள்!!
வேலன்டைன் வாரத்தின் இன்ரண்டாம் நாளான இன்று சாகலேட் தினம் (Chocolate Day) கொண்டாடப்படுகிறது!!
வேலன்டைன் வாரத்தின் இன்ரண்டாம் நாளான இன்று சாகலேட் தினம் (Chocolate Day) கொண்டாடப்படுகிறது!!
வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.
இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கி வரும் பிப்ரவரி 14 வரை வேலன்டைன் வீக் (Valentine Week) கொண்டாடம் துவங்கி உள்ளது.
இந்நிலையில் வேலன்டைன் வீக்-கின் மூன்றாம் நாளான இன்று சாகலேட் தினம் (Chocolate Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் காதலி/காதலனிடம் சாகலேட் பரிமாறி இன்றைய தினத்தை சிறப்பான தினமாக மாற்ற சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....
பிப்ரவரி 9 - சாகலேட் தினம் (Chocolate Day)..!
> சாக்லேட்-ல் ஓவியங்கள்.
> ஒரு வாளி முழுக்க சாக்லேட் பரிசு.
> சாக்லேட் மசாஜ்.
> சாக்லேட்-ல் உணவு செய்து கொடுப்பது.
சாக்லேட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
குறையும் கொழுப்புச் சத்து : உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சாக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.
அறிவாற்றலை அதிகரிக்கும் : சாக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சாக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதயப் பிரச்சனைகள் நீங்கும் : சாக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என பி.எம்.ஜே. நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
பாலியல் உணர்வைத் தூண்டும் : சாக்லெட் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர். நீங்களும் உங்கள் காதலியிடமிருந்து ஒரு முத்தம் வேண்டுமெனில் பெரிய சாக்லெட்டை வாங்கிக் கொடுங்கள்.