உலகெங்கிலும் அமும்படுத்தப்பட்டுள்ள கொரோனா முழுஅடைப்பு, சந்தையில் ஆணுறை விற்பனையினை அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் அறிவிக்கப்பட்ட முழுஅடைப்பு காரணமாக கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் தங்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனமும், கொரோனா முழுஅடைப்பு காரணமாக, உற்பத்தியை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளது, இதன் காரணமாக ஆணுறைகளின் பற்றாக்குறை தற்போது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மலேசியாவின் கரேக்ஸ் பிடி உலகளவில் பிரபலமான ஐந்து ஆணுறைகளில் ஒன்றை உற்பத்தி செய்கிறது. உலகளவில் நடைமுறை படுத்தப்பட்டுள்ள முழுஅடைப்பு அதன் மூன்று மலேசிய தொழிற்சாலைகளில் ஆணுறை உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளது. 


டூரெக்ஸ் போன்ற பிராண்டுகளால் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது, இங்கிலாந்தின் NHS அல்லது ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி போன்ற உதவித் திட்டங்கள் போன்ற பல்வேறு நாடுகளில் சுகாதார திட்டங்களால் விநியோகிக்கப்படுகிறது. இந்த விநியோகத்திற்கு ஏற்கனவே 100 மில்லியன் ஆணுறைகளின் பற்றாக்குறை உள்ளது, இந்நிலையில் தற்போது நிறுவனங்களின் முழுஅடைப்பு மேலும் ஆணுறை பற்றாக்குறையை அதிகரித்துள்ளது.


இந்நிலையில் இந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தங்கள் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது, ஆனால் சிறப்புத் தொழில்களுக்கான சிறப்பு சலுகையின் கீழ் வெறும் 50 சதவீத தொழிலாளர்களுடன். 


இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கூறுகையில், "தொழிற்சாலைகள் வேகத்தில் பாதையில் நேரம் எடுக்கும், நாங்கள் பாதி தேவையை வழங்க முயற்சிக்க செயல்படுகிறோம்" என தெரிவித்துள்ளார்.