கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினரின் அளவில்லா காதலின் வைரல் வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 


இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். 


இந்நிலையில்,  சீனாவில் 'COVID-19' என பெயிரிடப்பட்டுள்ள, 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு கொடுக்கும் வீடியோ இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்துள்ளது. அந்த வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


சீநாவின் People's Daily எனற நாழிதல் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இத வீடியோவை பதிவிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன், என்றென்றும் ஒவ்வொரு நாளும்: # COVID19 நோயால் கண்டறியப்பட்ட 87 வயதான ஒரு நபர் தனது மனைவியைப் பார்க்க ஒரு உட்செலுத்துதல் பாட்டிலை வைத்திருந்தார், மேலும் # COVID19 நோயாளியும், பக்கத்து வார்டில் இருந்து, பொறுமையாக அவளுக்கு தண்ணீர் மற்றும் உணவைக் கொடுத்தார். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன்!" என்ற தலைப்பின் கீழ் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. 



அந்த வீடியோவில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை பார்க்கிறார். அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார். இருவரும் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த வயதிலும் மனைவிக்கு உதவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில், நோய் பாதித்த மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் காதலும் வீடியோவை பார்க்கும் அனைவர் மனதையும் கரைத்துவிடுவதாக உள்ளது. காதலர் தினமான இன்று நீங்கள் காணும் சிறப்பான வீடியோவாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.