தரையிலும், கடலிலும் திருமணங்கள் போட்டிப்போட்டு நடத்தப்பட்டு வரும் இக்காலத்தில், விமானத்தில் சத்தம் இன்றி திருமணம் நடத்திய காதல் ஜோடி பற்றி தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் என்பது ஆடம்பரத்தின் அடையாளமாக மாறிவிட்ட இந்த கால கட்டத்தில், செல்வந்தர்கள் பலரும் தங்கள் வசதிகேற்ப கப்பலிலும், விமானத்திலும் திருமணம் செய்துகொள்வதை பார்திருப்போம், ஆனால் இங்கு ஒரு காதல் ஜோடி விமானத்தில் சாதரன பயணிகளாய் பயணித்து, தங்கள் பயணத்தின் போதே திருமணம் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.



பெல்டிமோர்-பொவுன்ட் Southwest Airlines விமானத்தில் கடந்த ஞாயிறு அன்று சாதாரன பயணிகளாக புறப்பட்ட காதல் ஜோடிகள், விமானம் புறப்பட்ட 45-வது நிமிடத்தில் திருமண ஆடைகளை அணிந்துக்கொண்டு விமானத்தில் இருமுனைகளில் இருந்து மையத்தை நோக்கி வந்து தங்களது திருமணத்தை குறித்து அறிவித்தனர்.



இந்த நிகழ்வினை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் படம்பிடித்து தனது முகப்புத்தக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.


கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விமானத்தில் சந்தித்தக்கொன்ட இந்த காதல் ஜோடி தங்களது திருமணத்தையும் அதே விமானத்தில் முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தங்களது திருமணத்தை இவ்வாறு செய்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.