மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்) ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது 20 விதமான விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் ஆகும். தகுதியுள்ள ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்க்கான நடைமுறைகள் www.crpf.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த இணையதளத்தில் சம்பளம், கல்வித் தகுதி, வயது, உயரம், மார்பளவு மற்றும் எப்படி விண்ணபிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பதவிக்கு தகுதியான ஆண்/பெண் இருபாலரும் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் இந்தியாவுக்கு வெளியே அதவது இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இவை அனைத்தும் மத்திய ஆயுத காவல் படை சட்டம் மற்றும் ஒழுங்கு படி நடைபெறும். விண்ணப்பம் இணைப்பு


இணையதளம் மூலம் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்துக்கொள்ளவும். அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்ககளை இணைத்து தபால் மூலம் The DIG, Group Centre, CRPF, Jharoda Kalan, New Delhi110072  என்ற முகவருக்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


பணி : தலைமை கான்ஸ்டபிள்/கான்ஸ்டபிள் (Head Constable/Constable)


நிர்வாகம் : மத்திய அரசு


காலிப்பணியிடம் : மொத்தம் 359 (தலைமை கான்ஸ்டபிள் -ஆண்:19, பெண்:01) (கான்ஸ்டபிள்- ஆண்:295, பெண்:44)


கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தங்களுக்கான விளையாட்டு பிரிவில் சிறப்பு தகுதி வேண்டும்.


வயதுவரம்பு:  13-01-2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்


சம்பளம்: தலைமை கான்ஸ்டபிள்ல் ரூ. 25500 - 81100 மற்றும் கான்ஸ்டபிள்: ரூ. 21700-69100 


விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 மற்றும் SC/ST பிரிவினருக்கு ஆண்/பெண் இருபாலருக்கும் இலவசம்


விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜனவரி 13, 2019. 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலே இணைக்கப்பட்டு உள்ள (விண்ணப்பம் இணைப்பு) கிளிக் செய்க.