மேஷம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்: தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரியங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சில சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். முக்கியமான விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.


மிதுனம்: புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்கள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியம் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் கோபமும், பதற்றமும் உண்டாகும்.


கடகம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புதிய நம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.


Also Read | சிவகுமரன் அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம் 


சிம்மம்: மனதில் நினைத்த காரியங்களை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் தேவையற்ற பயம் சார்ந்த எண்ணங்கள் தோன்றி மறையும். சிக்கலான விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.


கன்னி: குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் எண்ணிய எண்ணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது மறதி ஏற்பட்டு நீங்கும்.


துலாம்: உத்தியோகத்தில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.


விருச்சிகம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புதிய தன்னம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 


ALSO READ | 16 வகை செல்வத்தையும் தரும் வரலட்சுமி நோன்பு; விரத நேரங்கள்


தனுசு: உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வருமானத்திற்கு உண்டான உதவிகள் கிடைக்கும்.


மகரம்: மனதில் பழைய சிந்தனைகளின் மூலம் குழப்பமும், தடுமாற்றமும் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணங்களை மேற்கொள்ளும் பொழுது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.


கும்பம்: எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாகும்.


மீனம்: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.


ALSO READ | Hindu Tradition: வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி நோன்பு; அன்னையின் தரிசனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR