புது டெல்லி: வாழ்க்கையில் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் தற்கொலை ஆகிய சம்பவங்களின் அடிப்படையில், மூத்த பத்திரிகையாளர் தயாஷங்கர் மிஸ்ராவின் (Dayashankar Mishra) பிரபல வலைத் தொடர், ‘அன்புள்ள வழக்கையின் உரையாடல்" (Dear Zindagi-Jeevan Samvad) தொடர் புத்தக வடிவத்தில் வெளிவந்துள்ளது. மூத்த விமர்சகர் டாக்டர் விஜய் பகதூர் சிங், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தர்மேந்திர சிங், மத்திய பிரதேச ஆசிரியர் புஷ்பேந்திர பால் சிங் மற்றும் ஷீல் சைனி ஆகியோரால் இந்த புத்தகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் (Delhi) வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவை மூத்த பத்திரிகையாளர், சிறை சீர்திருத்தவாதி மற்றும் ஊடக ஆசிரியர் டாக்டர் வர்திகா நந்தா நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழாவில் பேசிய டாக்டர் விஜய் பகதூர் சிங் (Dr. Vijay Bahadur Singh), "பத்திரிகையாளர் தயாஷங்கரின் மனச்சோர்வு பற்றிய புத்தகத்தில் வாழ்கை பற்றிய முக்கிய நோக்கம் அடங்கியுள்ளது. இந்தி மொழியில் வெளிவந்துள்ள "வாழ்கை" பற்றிய இந்த புத்தகம் இதுவரை வாசகர்களுக்கு கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்கும் என்றார். தற்கொலை மற்றும் மனச்சோர்வைப் பற்றி பலர் மேற்கத்திய கண்ணோட்டத்துடன் சிந்திக்கிறார்கள். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றி புத்தகமாக எழுதியுள்ள தயாஷங்கர், அதே நேரத்தில் இந்திய பாரம்பரியக் கண்ணோட்டத்தை நவீன அம்சத்துடன் இணைதுள்ளார். 


மேலும் பேசியா டாக்டர் விஜய், மகாபாரதத்தில் அர்ஜுன் குழப்பமடைந்தபோது கிருஷ்ணர் அவருக்கு அறிவுரை கூறினார். இதேபோல், மனச்சோர்விலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கு நம்மை இட்டுச்செல்லும் பாதையை இந்த புத்தகம் காட்டுகிறது என்றார்.


இந்த புத்தகம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று புஷ்பேந்திர பால் சிங் (Pushpendra Pal Singh) கூறினார். ஏனென்றால் ஒருபுறம் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பைப் பெற அழுத்தம் உள்ளது. மறுபுறம் காதல், உணர்வு மற்றும் பிற உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடியாத சூழ்நிலையில் இளைஞர்களும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த நிலையில் இளைஞர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி யாருடனும் பேச முடியாமல் ஆபத்தான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் மற்றும் இருளின் நிலையை நோக்கி நடக்கிறார்கள். அத்தகைய இளைஞர்கள் இந்த புத்தகத்தைப் படிக்கும்போது, அவர்கள் தங்கள் நண்பர்களிடம் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது போல் உணருவார்கள் என்று கூறினார்.


காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று தர்மேந்திர சிங் (Dharmendra Singh) கூறினார். இந்தியாவில் உள்ளவர்கள் மன ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விருப்பம் காட்டுவதில்லை. இது மட்டுமல்லாமல், மனச்சோர்வைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது வெட்கக்கேடானதாக கருதப்படும் பழைய நம்பிக்கையால் அவதிப்படுகிறோம். அவர்களுக்கு இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


மருத்துவமனையில் இறக்கும் நிலையில் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தபோது, ‘அன்புள்ள வழக்கை-ஜீவன் சம்வத்’ (Jeevan Samvad) டிஜிட்டல் கட்டுரைகள் தனக்கு ‘வாழ்க்கை’ கொடுத்ததாக ஷீல் சைனி கூறினார். இந்த புத்தகம் மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல துயரத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும், அவர்களின் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாகக் உணர்தக்கூடியது என்று ஷீல் சைனி (Sheel Saini) கூறினார். இந்த புத்தகம் ஒரு நண்பரைப் போன்றது. துக்கத்திலும் துன்பத்திலும் உள்ளவர்களுக்கு உதவி கரம் நீட்டும் என்றார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.