டெல்லியில் கண்கவரும் விதமாக உலகின் 7 அதிசயங்கள்!!
டெல்லியில் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களை கொண்டு உலகின் 7 அதிசயங்கள் ஒரே இடத்தில் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களை கொண்டு உலகின் 7 அதிசயங்கள் ஒரே இடத்தில் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களை கொண்டு, தாஜ்மகால் உள்ளிட்ட உலகின் 7 அதிசயங்கள் வடிவைமக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில், டெல்லி மாநகராட்சி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதில் தாஜ்மஹால், ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்து மீட்பர் சிலை, பாரிசின் ஈஃபில் டவர், ரோம் நாட்டின் கொலோசியம், இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் மற்றும் கிசாவின் பிரமீடு ஆகியவற்றின் வடிவமைப்புகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஏற்கனவே பழைய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு பார்வைக்கான சோதனைகள் செய்யப்பட்டதாகவும், இறுதியாக பல வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தோட்டக்கலை இயக்குனர் அலோக் குமார் கூறியுள்ளார். விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பூங்காவில், சூரிய சக்தி மற்றும் காற்றாலையை பயன்படுத்தி மின்வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.