இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த நிதியாண்டில் 12.17 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தி பீகார், ஜார்கண்ட் மாநிலத்தவர்களில் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 - 2018 -ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்கள் விவரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். அதில் 2017 - 2018 ஆம் நிதியாண்டுக்கு தோனி மொத்தம் ரூபாய் 12 கோடி 17 லட்சம் ரூபாய் வருமான வரி கட்டியுள்ளதாக கூறியுள்ளனர். இதன்மூலம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களில்  அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.


கடந்த 2013-14-ம் நிதியாண்டிலும் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை தோனி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.