Diwali safety | இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாப்படுகிறது. நாடு முழுவதும் கோலாலகமாக இந்த பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?, பட்டாசு வெடிக்கும்போது செய்யக்கூடாதவை என்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆபத்து. பட்டாசு வெடிக்கும்போது ’எப்போதும் வரும் முன் காப்பது சிறந்தது’ என்ற பழமொழியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆபத்தில் சிக்கினால் அதற்கான விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அதனால் பட்டாசு வெடிப்பதில் விளையாட்டு வேண்டாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்னென்ன பட்டாசுகள் வாங்கலாம்?


குழந்தைகள் இருந்தால் சங்கு சக்கரம், பூந்தொட்டி வெடி, புஸ்வானம் வாங்கலாம். மினுமினுத்து ஊர்ந்து சென்று கலர்கலராக டப்பு டிப்பு என வெடிக்கும் சிறிய கலர் பட்டாசுகளை வாங்கலாம். மத்தாப்பு, சாட்டை ஆகியவை குழந்தைகள் பயப்படாமல் வெடிக்கக்கூடிய பட்டாசுகள். அவற்றை வாங்கி வெடிக்கலாம். சிறுவர்கள் என்றாலும் அதிகம் ஒலி எலுப்பக்கூடிய பட்டாசுகளை வாங்க வேண்டாம். சாதாரண மற்றும் எந்த பாதிப்புகளும் இல்லாத வெடிகளை வாங்குவதே சிறந்தது. 


மேலும் படிக்க | தீபாவளி அன்று ‘இவர்கள்’ உஷாரா இருக்கனும்! இல்லைன்னா பிரச்சனை..


எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்?


அரசு வழிமுறைகளின்படி காலை மற்றும் மாலை தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதனால், தீபாவளி நாளில் காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்த பிறகு பட்டாசு வெடிக்கலாம்.


பட்டாசு வெடிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை


குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் கூடவே இருக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்க பயந்தால் அவர்களை பட்டாசு வெடிக்குமாறு பெற்றோர் வற்புறுத்த வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் கையில் பிடித்து பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் விளையாட்டாக பட்டாசுகளை வெடிக்கும்போது தீ விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் பட்டாசு வெடிக்கும் இடத்தில் தயாராக ஒரு பக்கெட் தண்ணீர் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். சங்கு சக்கரம், புஸ்வானம், ராக்கெட் விடும்போது அவற்றை கையில் வைத்து தீ பற்றவே கூடாது. 


அதேபோல் பட்டாசு வெடிக்கவில்லை என உடனே சென்று கையில் எடுத்தும் பார்க்ககூடாது. வெடிக்காத பட்டாசுகளை புறம் தள்ளிவிடுங்கள். பட்டாசுகள் வெடித்து முடித்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவி விடாதீர்கள். கண்ணாடி பாட்டில்களுக்குள் வைத்து வெடிகளை வெடிக்காதீர்கள். பட்டாசு வெடிப்பது குறித்து அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பார்த்துக் கொள்ளுங்கள். அதனை மீறினால் காவல்துறை அபராதம் விதிக்கும். 


பட்டாசு வெடிப்பதால் வரும் பிரச்சனைகள்


பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அது குறித்து கவனமாக இருக்க வேண்டும். அடுத்தாக, பட்டாசு மருந்துகள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சுவாச பிரச்சனைகளும் ஏற்படும். ஏற்கனவே ஆஸ்துமா மற்றும் சுவாசம், நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் பட்டாசு மாசுவில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதிக ஒலி பட்டாசுகள் இதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் அவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தோல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களும் பட்டாசுகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ