பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் தாங்கள் செல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. மேலும் பூனையால் பல நல்ல பலன்களும் ஏற்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூனை (Cat), நமது இடபுற பாதையை மறைத்து, வடபக்கமாகப் போவதுதான் பொதுவாக அபசகுனமாகப் பார்க்கப்படுகின்றது. மற்ற சந்தர்ப்பங்களில் பூனை குறுக்கே வருவது தீங்கானதாக கருதப்படுவதில்லை. பூனையின் ஆறாவது உணர்வு ஒரு நாயைப் போலவே இருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே எதிர்கால நிகழ்வுகளை அது முன்னதாகவே அறிந்துகொள்கிறது என்றும் கருதப்படுகின்றது.


தந்திர மற்றும் மந்திர சாஸ்திரத்தில் பூனை ஒரு முக்கியமான உயிரினமாகக் கருதப்படுகிறது. பூனை வீட்டிற்குள் வந்து அழ ஆரம்பித்தால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பூனைகள் ஒரு இடத்தில் தங்களுக்குள் சண்டியிட்டுக் கொண்டால், அது அவ்விடத்தில் பணம் இழப்பு மற்றும் சண்டைகளுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.


பூனை பண வரவையும் சுட்டிக்காட்டுகிறது


தீபாவளி இரவு பூனை வீட்டிற்கு வருவது ஒரு நல்ல சகுனம் என்று பிரபலமாக நம்பப்படுகிறது. இதனால் அன்னை லஷ்மி நம் வீட்டிற்கு வந்து ஆண்டு முகழுவதும் பணப் பொழிவை உண்டு பண்ணுகிறார் என கருதப்படுகிறது. பூனை ஒரு வீட்டிற்குள் குட்டி போட்டால், அது நல்லது என்று பொதுவான கருத்து இருக்கிறது.


ALSO READ: பக்தர்கள் தங்கம், வெள்ளி நாணயங்களை பிரசாதமாக பெறும் கோவில் எது தெரியுமா..!!!


கிரக தோஷத்தை நீக்கும் பூனைகள்


ஜோதிட சாஸ்திரத்தின் படி பூனை ராகுவின் வாகனமாகக் கருதப்படுகின்றது. ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் பார்வையும் நிலையும் நன்றாக இருக்கவில்லை என்றால், அவர் வீட்டில் பூனையை வளர்ப்பது நல்ல பரிகாரமாகக் கருதப்படுகின்றது. பூனை முடியை சிவப்பு துணியில் கட்டி உடன் வைத்திருந்தால், காலசர்ப தோஷம் நீங்கும். இது தவிர, கண் திருஷ்டி, பில்லி சுனியம் ஆகிவற்றிலிருந்தும் இது காக்கும்.


பூனைகள் பொதுவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடித்து விடுவது வழக்கம். ஆனால், அப்படி நடந்தால் கவலை வேண்டாம். இது உங்கள் பண வருவாய்க்கான அறிகுறியாகும். நீங்கள் ஏதேனும் ஒரு நல்ல பணிக்குச் செல்லும்போது, பூனை ஒரு இறைச்சியை வாயில் சுமந்து செல்வதை கண்டால், நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் செல்லும் வேலையில் கண்டிப்பாக வெற்றியைக் காண்பீர்கள்.


பூனை நக்கி விட்டதா?


நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது பூனை உங்கள் தலையை நக்கினால் நீங்கள் அரசாங்க வழக்கில் சிக்கிக் கொள்ளலாம். பூனை கால்களை நக்குவது எதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டதற்கான அறிகுறியாகும். 


ALSO READ: திருமணத்தின் போது செய்யப்படும் சடங்குகளும், அதன் காரணங்களும்.!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR