புதுடெல்லி: தானம் என்பது இருப்போர், இல்லாதவருக்கு கொடுப்பது என்றே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. 'தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, 'நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள்" என்று கூறினார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்து தர்ம பாரம்பரியத்தின்படி, தானம் செய்வது பல நன்மைகளை போக்கும், பாவங்களுக்கு பரிகாரமாகும். அத்தகைய தானங்கள் பல வகைப்படும். தானம் செய்வதால் பலனும் கிடைக்கும். என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். 


Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண் 


அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும், சொர்க்கம் கிட்டும்.


வஸ்திர தானம் - ஆயுளை விருத்தி செய்யும்.


கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பித்ரு கடன் ஆகியவற்றை அகற்றும்.


தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.


கோ தானம் (பசு தானம்) - ரிஷிகடன், தேவகடன், பித்ரு கடன் போன்றவை தீரும்.


நெய், எண்ணெய் தானம் - நோய் தீர்க்கும்.


தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.


வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.


Also Read | March 28, 2021: தங்கத்தின் விலை 7,600 ரூபாய் குறைந்தது


தேன் தானம் - தேனை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் வைத்து தானம் அளித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.


நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.


அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.


பால் தானம் - துக்கம் நீங்கும்.


தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.


பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.


தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.


Also Read | Tiruchendur Temple பங்குனி உத்திர விழாவின் மகிமைகள் தெரியுமா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR