WhatsApp செய்திகளின் மூலத்தை கண்டறியும் புதிய முறை பற்றி தெரியுமா?
புதிய தொழில்நுட்ப அமைப்பு மூலம் வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்கியது யார் என்பதை கண்டறிய முடியும். வாட்ஸ்அப் செயலியில் உலா வரும் செய்திகள் சில சமயங்களில் தவறானவையாக, புரளிகளை கிளப்புவதாக இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
புதுடெல்லி: புதிய தொழில்நுட்ப அமைப்பு மூலம் வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்கியது யார் என்பதை கண்டறிய முடியும். வாட்ஸ்அப் செயலியில் உலா வரும் செய்திகள் சில சமயங்களில் தவறானவையாக, புரளிகளை கிளப்புவதாக இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்திகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது, மேலும் இது ஸ்பேம் செய்திகளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கையின்படி, இனிமேல் WhatsApp மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் ஒரு தனித்துவமான ஆல்பா-எண் ஹாஷ் விசையை நிறுவனம் உருவாக்கும். போகிறது, அதில் A முதல் Z வரையிலான எழுத்துக்களும் 0 முதல் 9 வரையிலான எண்களும் இடம் பெற்றிருக்கும்.
Also Read | ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற ஆசையா?
ஒவ்வொரு செய்திக்கும் உருவாக்கப்படும் ஹாஷ் விசைகள் தனித்தன்மை வாய்ந்தவை என்பதால், இது ஒரு செய்தியை முதலில் அனுப்பியவர் அல்லது உருவாக்கியவர் யார் என்பதை தெரிந்துக் கொள்வதை சுலபமாக்கும். அத்துடன் வாட்ஸ்அப் குறியாக்க தொழில்நுட்பத்தையும் மீறாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு செய்திக்கும் ஆல்பா-எண் ஹாஷ் ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப்பை உரையாடல்களில் இறுதி முதல் குறியாக்கம் (end-to-end encryption) உறுதி செய்யப்படும். வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறும் மனநிலையில் அரசாங்கம் இல்லை.
Also Read | Ind vs Eng: விராட்டுடன் இணைந்து இந்தியாவை வெற்றிநடை போட செய்யும் வீரர் யார்?
பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை மே 15 முதல் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆல்பா-எண் ஹாஷ் (alpha-numeric hash) செய்தியுடனே செல்லும் செய்திகளின் மூலம் சட்டத்துக்கு புறம்பான அல்லது சட்டவிரோத நடவடிக்கை ஏற்பட்டால் இந்த செய்தியை முதலில் யார் அனுப்பினார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
அரசாங்கத்தின் நடவடிக்கை வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்திகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது ஸ்பேம் செய்திகளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சிகளையும் இலக்காக கொண்டுள்ளது.
Also Read | ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக தலைவர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR