கோயிகளில் இறைவனுக்கு அபிஷேகம் செய்த பாலை நாம் கண் தலையில் வைத்து கொள்வது ஏன் என்று தெரியுமா? -காரணம் உள்ளே! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். நாம் தினசரி கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். 


இறைவழிபாட்டிற்காக கோவிலுக்கு செல்லும் வழக்கம் இந்துக்கள் அனைவருக்கும் உண்டு. கோவிலுக்கு சென்றால் மன நிம்மதி கிடைக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். அது எழுதிவைக்கப்படாத உண்மை. நாம் கோவிலுக்கு சென்றால் மன நிம்மதியுடன், நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கிறது. 


கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன.


கோயிலில் இறை வழிபாட்டின் போது நாம் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக நாம் பால், இளநீர், தயிர், பன்னீர், சந்தானம் என பல பொருட்களை உபயோகிப்போம். அந்த அபிசேகம் செய்த பாலை நாம் அனைவரும் கண்ணில் ஒற்றிக்கொள்வது வழக்கம். அப்படி ஒற்றிக்கொள்வது எதற்காக அதனால் என்ன நன்மை என்று உங்களுக்கு தெரியுமா?.  


அதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்து கொள்ளுங்கள்...! 


சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பொதுவாக இறைவனின் திருவடிகளையும், பெரியவர்களின் திருவடிகளையும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்வது இப்படித்தான்.


அதாவது, அவற்றிற்கு கொடுக்கும் உயர்ந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது. தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டாகும்.