நகத்தை அழகுபடுத்த நாம் நயில் பாலிஷ் பூசிக் கொள்கிறோம். நெயில் பாலிஷ் புதிதாக போட்டுக் கொண்டால் நகங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அது சிறிது பெயர்ந்து விட்டால், பார்க்க  அசிங்கமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும், நாம் எங்கேயாவது முக்கியமான இடத்திற்கு செல்லவோ அல்லது பார்ட்டிக்கு செல்ல தயாராகும் போது, நெயில் பாலிஷ் ரிமீவர் காலியாகி போயிருக்கும். ஆனால், அதற்காக கவலைப்பட தேவையில்லை.


நெயில் பாலிஷ் 4 முதல் 7 நாட்கள் வரை தான் நிலைக்கும். அதற்கு மேல் நிலைக்காது. சிலர் ஏற்கனவே நகங்களில் எஞ்சியிருக்கும் நெயில் பாலிஷ் மீதே, புதிதாக நெயில் பாலிஷ் போட்டு விடுவார்கள். அது நகத்தின் அழகை முழுமையாக கெடுத்து விடும். அப்படி செய்யவே கூடாது. 


சரி, நெயில் பாலிஷ் ரிமூவர் தீர்ந்து விட்டால் என்ன செய்யலாம்...


1. டியோடரண்ட் ஸ்ப்ரே (Deodarant Spray)
உங்களிடம் டியோடரண்ட் ஸ்ப்ரே இருந்தால், அதனை பயன்படுத்தலாம். நெயில் பாலிஷ் ரிமூவரைப் போல் வேகமாக வேலை செய்யாது என்றாலும், அதனை தடவி சிறிது நேரம் காட்டனை வைத்து தேய்த்தால் முழுமையாக நீங்கி விடும். 


ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!


2. டூத் பேஸ்ட் (Tooth Paste) 


டூத் பேஸ்ட் உங்களிடம் இல்லாமல் இருக்காது. டூத்பேஸ்ட்டில், நெயில் பாலிஷ் ரிமூவரில் உள்ள எதில் ஆக்ஸீடேட் இருக்கிறது.அதனால், டூத்பேஸ்டை எடுத்து தடவி, சிறிது நேரம் காட்டனை வைத்து தேய்த்தால்,  நெயில் பாலிஷ் நீங்கி விடும்.


3. ஹாண்ட் சானிடைஸர் ( Hand Sanitiser) 


இப்போது கொரோனா காலம். அதனால், ஹாண்ட் சானிடைஸர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். சிறிது ஹாண்ட் சானிடைஸரை நகத்தின் மீது தடவி, காட்டனை வைத்து தேய்த்தால், நெயில் பாலிஷ் முழுமையாக அகன்று விடும். 


அதனால், இனி நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லையே என கவலைப் பட வேண்டாம்.  அதற்கு மாற்றாக உள்ள மேலே உள்ள பொருட்களை பயன்படுத்தி, நீங்கள் உங்கள் நகங்களை விருப்பபடும் போதெல்லாம் அழகு படுத்திக் கொள்ளலாம்.  உங்கள் உடைக்கு ஏற்ற வண்ணங்களை நகத்தில் பூசி அழகு பார்க்கலாம்.


ALSO READ | அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR