பொது வருங்கால வைப்பு நிதியான பிபிஎஃப், மிகவும் நம்பகமான முதலீட்டு வழிமுறையாகும். இதில் செய்யப்படும் முதலீடு 100% பாதுகாப்பானது, இதில் வருமானமும் நன்றாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு வரி விலக்கும் கிடைக்கும். பிபிஎஃப் முதலீட்டு வரம்பு பற்றி நாம் பேசினால், ஒருவர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முதலீட்டை ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பதற்கான ஒரு யுக்தியைப் பற்றிதான் இந்த பதிவில் காணவுள்ளோம். இதில் உங்களுக்கு அதே வருமானம் தான் கிடைக்கும் ஆனால் வரி விலக்கும் கிடைக்கும்.


பிபிஎஃப்-இல் முதலீட்டு வரம்பை இந்த வழியில் இரட்டிப்பாக்கலாம்:


பிபிஎஃப்-இல் வருமான வரியின் பிரிவு 80C இன் படி, 1.50 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் வருமான வரி விலக்கு கிடைக்கும். எனினும், பலருக்கு பிபிஎஃப்-இல் அவர்களது முதலீட்டு வரம்பு தீர்ந்து, அவர்களது வருமானம் வருமான வரியின் கீழ் வரத் தொடங்குகிறது. இதனால் வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. 


மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு! அசுத்தம் செய்தால் சிறை செல்ல நேரிடும்..!! 


அத்தகைய சூழ்நிலையில், இவர்கள் மற்ற முதலீட்டு விருப்பங்களைத் தேடத் தொடங்குகிறார்கள். மறுபுறம், வரி நிபுணர்களின் கூற்றுப்படி, முதலீட்டாளர் திருமணமானவராக இருந்தால், அவர் தனது மனைவி அல்லது கணவரின் பெயரில் பிபிஎஃப் கணக்கைத் திறந்து அதில் தனித்தனியாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.


பிபிஎஃப்-இல் செய்யும் முதலீடு பல நன்மைகளை வழங்குகிறது:


வாழ்க்கை துணையின் பெயரில் பிபிஎஃப் கணக்கைத் திறப்பது சந்தேகத்திற்கு இடமின்றி பிபிஎஃப்-இல் முதலீட்டின் வரம்பை இரட்டிப்பாக்கும். ஆனால் அப்போதும் வருமான வரி விலக்கு வரம்பு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக மட்டுமே இருக்கும். ஆனால், பிபிஎஃப் முதலீடு இ-இ-இ பிரிவின் கீழ் வருவதால், வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு கண்டிப்பாக வரி விலக்கு கிடைக்கும்.


ஐ.ஆர்.டி-இல் கிளப்பிங் விதிகளின் எந்த விளைவும் இல்லை :


வருமான வரியின் பிரிவு 64 இன் படி கணவர் மனைவிக்கு அளிக்கும் தொகை அல்லது பரிசுகளின் மூலம் வரும் வருமானம் கணவரின் வருமானத்தில் இணைக்கப்படும். ஆனால் பிபிஎஃப் முதலீடு இஇஇ பிரிவின் கீழ் வருவதால், அதற்கு முற்றிலுமாக வரிவிலக்கு கிடைக்கும். இங்கு கிளப்பிங் விதிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு டபுள் போனஸ்; இந்த பெரிய அறிவிப்பு வெளியாகும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR