மலை போல் குவியும் கொரோனா கழிவு.. இயற்கையை கெடுத்து ஏற்படுத்தும் பேரழிவு..!!!
பொது முடக்கம் காரணமாக, மனித நடமாட்டம், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்தும் முடங்கியதால், சுற்று சூழல் மாசுபாடு வெகுவாக குறைந்தது
உலகெங்கிலும் கொரோனா பரவலை தடுக்க, லாக்டவுன் அதாவது, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கினர்.
மனித நடமாட்டம், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்தும் முடங்கியதால், சுற்று சூழல் மாசுபாடு வெகுவாக குறைந்தது தொடர்பான பல சம்பவங்களை பற்றி பல சம்பவங்களை பற்றி அறிந்தோம், செய்திகளிலும் பார்த்தோம்.
மாசு இல்லாத தூய்மையான கங்கை நீர் காணக்கிடைக்காத அறிய காட்சியாக இருந்தது. காற்று மாசுபாடும் பெருமளவு குறைந்தது.
பின்னர் லாக்டவுன் தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்கள் மெதுவாக வீட்டை விட்டு வெளியே வரத்தொடங்கினர். இயல்பு வாழ்க்கை முன் போல் இல்லாவிட்டாலும் ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருகிறது எனக் கூறலாம்.
இப்போது அந்த பசுமையான, கண்ணிற்கு குளிர்ச்சியான காட்சிகள் மறைந்து போய், பொது இடங்களிலும், நீர் நிலைகளிலும் பாஸ்டிக் கழிவுகள் அதிகமாகியுள்ளதை பார்க்கிறோம்.
COVID-19 தொற்றுநோயிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, நாம், கையுறைகள் முதல், பல வித பாதுகாப்பு சாதங்களை பயன்படுத்தி வருகிறோம்.
இதன் பயன்பாடு அதிகரித்து வருவது, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மற்றொரு பெரிய பிரச்சினை அல்லது அதன் மூலம் ஏற்படும் தொற்றுநோயை நோக்கி நாம் செல்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
COVID-19 தொற்றுநோயின் தாக்கம் அனைவரையும் உடல் ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக என ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. இதனால் மக்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு, மற்றொரு தொற்றுநோயை எதிர்கொண்டால், அது பேரழிவை தான் ஏற்படுத்தும்.
மக்களின் தங்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது. மக்கள் பயன்படுத்தும், கையுறைகள் மற்றும் பிபிஇ கருவிகளை தயாரிப்பது தொற்றுநோயைத் எதிர்த்து போராடும் நடவடிக்கையில் முக்கியமான ஒன்று தான். ஆனால் அதே சமயம், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு நல்லதல்ல.
தொற்றுநோய் பரவலுக்கு முன்னர், உள்ளூர் நிலையிலும், சர்வதேச அமைப்புகள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை தடுக்கவும் கடுமையாக முயன்றன. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் விழலுகுக்கு இறைத்த நீர் போல் ஆகி விட்டது
COVID-19 தொற்றுநோய் காரணமாக, உலகெங்கிலும் பிளாஸ்டிக் பயன்பாடு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது என்றாலும், இந்த ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தவிக்கும் வகையில் ஒரு மாற்று திட்டத்தை தயாரிக்க, முன்னணி தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் முன் வந்து, இதற்கான தீர்வை காண வேண்டும்.
இல்லை என்றால், நாம் இன்னொரு பேரழிவை நோக்கி சென்று விடுவோம். நச்சு மற்றும் மக்கும் தன்மை இல்லாத பொருட்களின் பயன்பாட்டை குறைத்து, சுற்று சூழலை பாதிக்காத கண்ணாடி, காகிதம், மட்பாண்டங்கள் போன்றவற்றால் ஆன பொருட்களை அதிகம் பயன்படுத்தி, பூமியை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காப்பாற்ற முன் வரவேண்டும்.