தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் வரலாற்றுப்படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த "சயீரா நரசிம்ம ரெட்டி" படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, நான் ஈ சுதீப் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இந்த படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.


இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய் சேதுபதிவை வாழ்த்தி, சயீரா நரசிம்ம ரெட்டி குழுவினர், படத்தில் அவரது லுக்கை வெளியிட்டுள்ளனர். படத்தில் 'ராஜ பாண்டி' என்ற கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. 



 



 


சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான ராம் சரண் இந்த படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.