முடி கொட்டுவதை உங்களால் தடுக்கமுடியவில்லையா? உணவாக இந்த இரண்டை சேர்த்து சாப்பிடுங்கள்
Hair Loss Prevention : முடி தொடர்ச்சியாக கொட்டிக் கொண்டே இருந்தால், அதனை தடுக்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்றால் உங்கள் உணவு முறையில் இந்த இரண்டை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
முடி கொட்டுவது இன்றைய காலத்தில் ஆண், பெண் இருபாலருமே எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருக்கிறது. பொதுவாக முடி உதிர்வு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கொத்து கொத்தாக விழுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆண், பெண் யாராக இருந்தாலும் முடி கொட்டினால் உடனே தேங்காய் எண்ணெய் அதிகம் தலைக்கு இடுவது அல்லது அரப்பு, சீவக்காய் சாம்புகளை தொடர்ச்சியாக தேய்ப்பது உள்ளிட்ட பல வீட்டு வைத்திய முறைகளை எல்லாம் செய்து பார்க்கிறார்கள். வெங்காயம், வெந்தையத்தை அரைத்து தலைக்கு தேய்ப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சத்தான உணவை உண்ணாததும் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு குறித்து யாரும் கவலைக் கொள்வதில்லை. நீங்கள் சரியான மற்றும் சத்தான உணவை எடுத்துக் கொண்டால், முடி உதிர்தலில் இருந்து நிவாரணம் பெறலாம். கூடுதலாக, உங்கள் தலைமுடி அழகாக மாறும். முடி உதிர்வைத் தடுக்கவும் முடியும். அதனால் எப்படியான உணவை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் முடி உதிர்வை தடுக்கலாம்என்பதை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?
முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்
பழங்கள் சாப்பிடுவது
பழங்களில் நிறைய சத்துகளும், தாது பொருட்களும் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். அவற்றை தொடர்ச்சியாக உணவுகளில் எடுத்துக் கொள்ளும்போது முடிக்கு தேவையான சத்துகளையும் இயல்பாகவே கிடைத்துவிடும். அனைத்து வகையான பழங்களிலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முடி உதிர்வதைத் தடுக்க, வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த பெர்ரி, செர்ரி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும். இந்த பழங்களை உட்கொள்வது உங்கள் உச்சந்தலையை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும்.
ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிடலாம்
உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளில் முடி ஆரோக்கியமாக இருக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் புரதம், துத்தநாகம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், செலினியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன. இது முடியை வலுப்படுத்துவதுடன் முடி உதிர்வதைத் தடுக்கிறது. உங்கள் உணவில் அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகளை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் தலைமுடியை பலப்படுத்தும்.
பச்சை காய்கறிகள் சாப்பிடவும்
பழங்களைப் போலவே, பச்சை இலைக் காய்கறிகளிலும் முடி உதிர்வதைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸ், கீரை போன்ற காய்கறிகளில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி உள்ளது. ஒரு கப் சமைத்த கீரையில் சுமார் 6 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். எனவே தினமும் பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். இது உங்கள் உடல், தோல் மற்றும் முடிக்கு மிகவும் சிறந்தது.
மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ