அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!
நாட்டில், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் உட்பட உலகின் பல முக்கிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்தன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உங்கள் EMI தொகையும் அதிகமாகும். இப்போது ரெப்போ விகிதம் 5.40% லிருந்து 5.90% ஆகவும், SDF விகிதம் 5.15% லிருந்து 5.65% ஆகவும் அதிகரித்துள்ளது. பொருளாதார கொள்கைகளுக்கான (MPC) 6 உறுப்பினர்களில் 5 பேர் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தனர். பணவீக்கம் இன்னும் அனைத்து துறைகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் உட்பட உலகின் பல முக்கிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எம்பிசியின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரெப்போ விகிதத்தை 0.50-0.50 சதவீதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. முன்னதாக மே மாதம் மத்திய வங்கி திடீரென வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தியது. இதன்படி மே மாதத்தில் இருந்து ரெப்போ விகிதம் 1.90 சதவீதம் அதிகரித்தது.
மேலும் படிக்க | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?
ரெப்போ ரேட் அதிகரிப்பால் கடன் வாங்கும் செலவுகள் அதிகரிக்கும். இது அவர்களின் கடன் வாங்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது . மேலும், சில்லறை கடன் வாங்குபவர்களுக்கு பல்வேறு கடன்கள் மற்றும் முன்பணங்களுக்காக வழங்கப்படும் வட்டி விகிதம் அதிகரிக்க வழி வகுக்கிறது
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் கடன் விகிதம் மற்றும் அதன் அடிப்படையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன, அதேசமயம் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்பது வங்கிகளில் இருந்து டெபாசிட்களுக்கு RBI வழங்கும் வட்டி விகிதம் ஆகும். . இதுபோன்ற சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்கும் போது, வங்கிகளின் சுமை அதிகரிக்கிறது. வங்கியின் சார்பில் கடன் விகிதம் அதிகரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: டிஏ அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ