EPFO Good News: PF கணக்கில் வரவுள்ளது 8.5% வட்டித் தொகை, விரைவில் அறிவிப்பு
EPFO மிக விரைவில் சந்தாதாரர்களின் கணக்கில் 8.5% வட்டி பணத்தை டெபாசிட் செய்யவுள்ளதாக EPFO ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
EPFO Latest News: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO -ன் 6.5 கோடி சந்தாதாரர்கள் மிக விரைவில் நல்ல செய்தியைப் பெறப் போகிறார்கள். EPFO மிக விரைவில் சந்தாதாரர்களின் கணக்கில் 8.5% வட்டி பணத்தை டெபாசிட் செய்யவுள்ளதாக EPFO ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
8.5% வட்டி பணம் எப்போது கிடைக்கும்?
ட்விட்டரில் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த EPFO, பணத்தை செலுத்துவதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியது. கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்படும் போது, அது ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது. யாருக்கும் வட்டி இழப்பு ஏற்படாது என்றும் உறுப்பினர்கள் பொறுமையாக இருக்குமாறும் EPFO கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், PF நிதியின் வட்டி பணம் எப்போது கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்பதை EPFO இந்த ட்வீட்டில் தெரிவிக்கவில்லை. 2020-21 நிதியாண்டுக்கான 8.5% வட்டிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள், பிஎஃப்-ன் 8.5% வட்டித்தொகை கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.
வட்டி விகிதம் 7 வருடங்களில் குறைந்த அளவில் உள்ளது
கடந்த 2019-20 நிதியாண்டில், KYC யில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பல சந்தாதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. EPFO 2020-21 நிதியாண்டுக்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் 8.5% ஆகவே வைத்திருந்தது, இது கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டி விகிதமாகும்.
1. மிஸ்ட் கால் மூலம் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்
உங்கள் பிஎஃப் பணத்தை சரிபார்க்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் EPFO செய்தி மூலம் PF விவரங்களைப் பெறுவீர்கள். இங்கேயும் உங்கள் UAN, PAN மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.
2. ஆன்லைனில் இருப்புத் தொகையை சரிபார்க்கலாம்
1. ஆன்லைனில் இருப்புத் தொகையை சரிபார்க்க, EPFO இணையதளத்தில் உள்நுழைந்து, epfindia.gov.in இல் உள்ள e-passbook ஐ கிளிக் செய்யவும்.
2. இப்போது உங்கள் e-passbook ஐ க்ளிக் செய்தால், passbook.epfindia.gov.in -வில் ஒரு புதிய பக்கம் திறக்கும.
3. இதன் பிறகு, நீங்கள் உங்கள் பயனர்பெயர் (UAN எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை நிரப்ப வேண்டும்.
4. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு வருவீர்கள், இங்கே நீங்கள் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. இங்கே இ-பாஸ்புக்கில் உங்கள் EPF இருப்பை நீங்கள் காணலாம்.
ALSO READ: EPFO புதிய வசதி: அவசர காலத்தில் PF கணக்கிலிருந்து உடனடியாக ரூ. 1 லட்சம் அட்வான்ஸ்
3. UMANG Aapp இல் இருப்புத் தொகையை சரிபார்க்கலாம்
1. இதற்கு, உங்கள் UMANG செயலியைத் திறந்து (Unified Mobile Application for New-age Governance) EPFO ஐக் கிளிக் செய்யவும்.
2. இப்போது மற்றொரு பக்கத்தில், employee-centric services-ல் கிளிக் செய்யவும்.
3. இங்கே 'வியூ பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல் (OTP) எண்ணை நிரப்பவும்.
4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் PF இருப்பை சரிபார்க்கலாம்.
4. எஸ்எம்எஸ் மூலம் இருப்புத் தொகையை சரிபார்க்கலாம்
உங்கள் யுஏஎன் எண் ஈபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பிஎஃப் இருப்பு பற்றிய தகவலை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம். இதற்கு நீங்கள் EPFOHO என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதன் பிறகு நீங்கள் செய்தி மூலம் பிஎஃப் பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.
ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பிஎஃப் இருப்பைப் பற்றி இந்த சேவை மூலம் தெரிந்து கொள்ளலாம். பிஎஃப் இருப்பை தெரிந்து கொள்ள, உங்கள் UAN, வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் (AADHAR) இணைக்கப்பட வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR