இபிஎஃப்ஓ, சமீபத்திய அப்டேட்: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி உள்ளது. மோடி அரசு விரைவில் வட்டிப் பணத்தை கணக்கில் செலுத்த உள்ளதால், ஊழியர்களின் வங்கி கணக்கில் உள்ள தொகை அதிகரிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு 2022-2023 நிதியாண்டுக்கு 8.15 சதவீத வட்டி வழங்க முடிவு செய்திருந்தது. இப்போது அனைத்து ஊழியர்களும் தங்கள் கணக்குகளில் இந்த வட்டி தொகை வர காத்திருக்கிறார்கள். மிக விரைவில் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு அரசு இந்த நற்செய்தியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான பிஎஃப் ஊழியர்கள் பயனடைவார்கள். இம்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டியை பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். மறுபுறம், வட்டி பிஈப் சந்தாதாரர்களின் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும், எந்த தேதியில் இது செலுத்தப்படும் என அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இந்த மாத இறுதிக்குள் வட்டித் தொகை வரவு வைக்கப்படலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் வரும் 


இந்த நிதியாண்டிற்கு 8.15 சதவீத வட்டித் தொகையை மத்திய மோடி அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்குப் பிறகு, கணக்கில் எவ்வளவு வட்டி வரும் என்ற கேள்வி அனைத்து சந்தாதாரர்களின் மனதிலும் உள்ளது. இதை தெரிந்துகொள்ள இதன் கணக்கீட்டை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். 


- உங்கள் EPF கணக்கில் 6 லட்சம் ரூபாய் இருந்தால், 8.15 சதவிகித வட்டியாக சுமார் 50,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். 


- உங்கள் கணக்கில் ரூ. 7 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், வட்டியாக சுமார் ரூ. 58,000 கிடைக்கும். 


- உங்கள் EPF கணக்கில் ரூ. 8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத வட்டியாக சுமார் ரூ. 66,000 கிடைக்கும். 


பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை அறிய எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதை மிக எளிதாக தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | ஊழியர்கள் கவனத்திற்கு! EPFO கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை!


இந்த வழியில் விரைவாக செக் செய்யலாம்


EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். இதற்காக நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று அலைய வேண்டாம். இது தவிர, EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


இபிஎஃப்ஓ புதுப்பிப்பு


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது தனது ஊழியர்களுக்கு பல வித புதுப்பிப்புகளை வெளியிடுகின்றது. இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளி / நிறுவனம் மூலம் சரிபார்க்க வேண்டியது (வேலிடேஷன்) அவசியம் என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘EPF கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கையும் முதலாளி / நிறுவனத்தின் லாக் இன் -இல் தெரியும். கூடுதலாக, ஒரு தானியங்கி மின்னஞ்சல் முதலாளி / நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | EPFO: உங்கள் சம்பளத்தில் PF பிடித்தம் செய்யப்பட்டால், இந்த செய்தியை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ