போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்!!
முகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்!!
முகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்!!
சமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்திகள் சென்று சேர்கிறதோ இல்லையோ, போலி செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகின்றன. இதனால், ஏற்படும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும் செய்திகளின் தரத்தை உயர்த்தவும் இளம் தலைமுறை டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களைப் பணியமர்த்த முகநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரும் வெளியீட்டாளரான ஆக்ஸல் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் CEO மதாய்ஸ் டோப்னெர் உடன் ஃபேஸ்புக் CEO மார்க் ஷூக்கர்பெர்க் தரமான செய்திகளைப் பயனாளர்களுக்கு வழங்குவது குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் அதிகம் உலவுகின்றன. சிலர் 700 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதை மிகப்பெரிய பிரச்னையாகக் கருதுகிறேன். புலனாய்வு ஊடகவியலாளர்கள், நிரூபர்கள் மற்றும் மிகப்பெரும் ஊடக நிறுவனங்களுக்கு நாம் மிகப்பெரும் பொருளாதார ஊதியம் வழங்கவேண்டும். அதற்காக இதை வணிக நோக்கோடு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
செய்தியாளர்கள், ப்ளாகர்கள், டிஜிட்டல் வெளியிட்டாளர்கள், பாரம்பரிய பதிப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் வகையில் ஃபேஸ்புக் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என மார்க் சக்கர்பெர்க் விளக்கினார்.