Ration Card News In Tamil: இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளால் மக்களின் நலன்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்களும் இந்த நலத்திட்டங்களால் பயனடைகிறார்கள். அதிலும் குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் பொது விநியோகம் செய்யப்படுவதால் பல கோடிக்களின் பசி பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்டவை பலருக்கும் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் மூலம் மக்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நம்மூரில் வேட்டிச்சேலை, பொங்கல் தொகுப்பு, பொங்கல் சிறப்புத்தொகை வழங்கல் ஆகியவை அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே விநியோகிக்கப்படுகின்றன. 


ரேஷன் கார்டு முக்கிய ஆவணம்


அந்த வகையில், ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்பது அவசியம் என்பது தெரிந்ததுதான். இதனை பெறுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. ரேஷன் அட்டையே உங்களின் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கான முக்கிய அரசு ஆவணமாக செயல்படும். தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. 


மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!


இந்நிலையில், இந்த முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு குறித்து சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று உத்தர பிரதேசத்தில் வெளியாகியிருந்தது. அதவாது, நீங்கள் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என தகவல்கள் பரவின. இது உண்மையா, இதுகுறித்து ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா என்பதை இங்கு காணலாம்.


ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படுமா?


உத்தர பிரதேசத்தில், சிறு நிதி நிறுவனத்தின் ஏஜென்ட் ஒருவர் பெண்களிடம் இதை சொல்லியிருக்கிறார்...'கடன் வாங்கியவர்கள் உடனே பணத்தை செலுத்த வேண்டும் இல்லையெனில் ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும். இதனால் அரசு தரும் சலுகைகளையும், நலத்திட்டங்களையும் பெற முடியாது' என கூறியதால் பெண்மகளும் அச்சமடைந்துள்ளனர். இந்த விவகாரம் இணையம் வரை வந்த உடன் பலரும் இதுகுறித்த அச்சத்தை தெரிவித்தனர். 


ஆனால், இதுபோன்ற தகவல்களை நீங்கள் நம்ப வேண்டும். இந்தியாவில் ரேஷன் கார்டை அத்தகைய வழியில் பறிமுதல் செய்ய சட்டப்படி வாய்ப்பில்லை. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என அரசும் எங்கும் அறிவிக்கவில்லை. எனவே, இதுபோன்ற தவறான தகவல்களை அளிப்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இப்படி தவறான தகவல்களை பரப்புவோர் மீது புகார் அளியுங்கள். அச்சப்படாதீர்கள். ரேஷன் கார்டுக்கும் நீங்கள் வாங்கிய கடனுக்கும் தொடர்பே இல்லை. ஒருவேளை நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாவிட்டாலும் ரேஷன் கார்டு மூலம் ரேஷனில் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம். 


e-KYC உடனே செய்யுங்கள்


தற்போது நீங்கள் ரேஷன் அட்டைகளை வைத்திருக்கிறீர்கள் என்றால் உடனே e-KYC செய்துவிடுங்கள். வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் e-KYC செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் e-KYC செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகலாம். ரேஷன் கார்டை பெற தவறான ஆவணங்களை சமர்பித்தாலும் பின்னர் அது ரத்தாகலாம். 


மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ