LGBTQ சமுதாயத்தை பெருமைபடுத்த சிறப்பு Fashion Show!
மந்திரி மல்ஹோத்ரா, சமாந்த் சௌஹான் மற்றும் கவுராவ் குப்தா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் சேர்ந்து பாலினமற்ற ஆடை கண்காட்சி டெல்லியில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது!
மந்திரி மல்ஹோத்ரா, சமாந்த் சௌஹான் மற்றும் கவுராவ் குப்தா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் சேர்ந்து பாலினமற்ற ஆடை கண்காட்சி டெல்லியில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது!
இந்தியாவில் ஓரின சேர்க்கை என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. இதனால் ஓரின சேர்க்கை எதிராக சட்டப்பிரிவு 377 உருவாக்கப்பட்டது. இந்த சட்ட பிரிவு படி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஓரின சேர்க்கை அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் உறவு என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த சட்டப்பிரிவு நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
இதன்படி கடந்த செப்டம்பர் 6-ஆம் நாள் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377-னை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த சட்டபிரிவு 377-னை கொண்டாடும் வகையில் டெல்லியில் லோட்டஸ் மேக்-அப் இந்தியா பேஸன் வீக் நடத்தப்பட்டது. பாலினமற்ற அன்பு என்ற தலைப்பபில் நடத்தப்பட்ட அந்த ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் LGBTQ அடையாளமாக கருதப்படும் வானவில் வண்ணத்தில் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆடைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
இந்த வானவில் வண்ணமானது 1978-ஆம் ஆண்டு கில்பர்ட் பார்க்கர் என்பவரால் உறுவாக்கப்பட்டது. இந்த வானவில் வண்ணத்தில் இடம்பெற்றுள்ள வண்ணங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், மற்றும் ஊதா ஆகியவை LGBTQ சமூதாயத்தில் அடையாளமாக கருதப்படுகிறது.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆடைகளும், மாடல்களும் வண்ணமயமாக தென்பட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்!