டவ் விளம்பரத்தினை அடுத்து தற்போது H&M விளம்பரமும் சர்சையில் சிக்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய ஃபேஷன் சில்லறை விற்பனையாளர் H & M, இன வேறுபாட்டினை குறிக்கும் விளம்பரத்தினை தங்களது வலைப்பக்கத்தில் உபயோகித்ததிற்கு திங்களன்று மன்னிப்பு கோரியுள்ளது.


அந்த விளம்பரத்தில் உள்ள சிறுவன் அணிந்திருக்கம் டீ-சர்டில் "காட்டில் உள்ள மிகச்சிறிய குரங்கு" என்ற குறிப்பிட்டுள்ளது. இந்த வாசகம் தற்போது பிரச்சனையை ஏற்படத்தவில்லை, அதை அணிந்திருந்த சிறுவன், ஒரு கருப்பின குழந்தையை இருந்தது தான் பிரச்சனை.


இந்த விளம்பரமானது இன வேறுபாட்டினை குறிப்பதாக அனைத்து தரப்பிலும் கண்டனங்கள் எழுந்ததினால் அந்த விளம்பரத்தினை தங்கள் வலைப்பக்கத்தில் இருந்து H&M நிறுவனம் நீக்கியுள்ளது.


இச்சம்பவம் குறித்து அந்நிறுவன வடிவமைப்பாளர் அலேக்ஸ் மென்டிஸ தெரிவக்கையில் "2018 ஆம் ஆண்டில், பிராண்ட்கள் / கலை இயக்குனர்கள் குறைபாட்டின் காரணமாகவும், அலட்சிபோக்கின் காரணமாகவும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது, எனவும் தங்களது தவறுக்கு வருத்தம் தெரிவித்தும் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.


பெரும் நிறுவனங்களில் இவ்வாறு தவறு நிகழ்வது இது முதல் முறை அல்ல, கடந்த 2017-ஆம் ஆண்டு யூனிலீவர்-க்கு சொந்தமான "டவ்" தனது பேஸ்புக் பக்கத்திலுருந்து ஒரு "மூன்று நிமிட விளம்பர வீடியோ கிளிப்" (இன வேறுபாட்டினை குறிப்பதாக வெளிவந்த தங்களது விளம்பரத்தினை) ஒன்றை நீக்கியது. பின்னர் அதற்கும் மன்னிப்பும் கோரியது.