Toll Tax-ல் தள்ளுபடி பெற FASTag இருக்க வேண்டியது அவசியம்: அரசின் புதிய விதி!!
நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் இந்த செய்தியைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். ஏனெனில் டிஜிட்டல் கட்டணத்தை ஊக்குவிப்பதற்காக கட்டண வரி தொடர்பான ஒரு விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது.
நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் இந்த செய்தியைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். ஏனெனில் டிஜிட்டல் கட்டணத்தை (Digital Payment) ஊக்குவிப்பதற்காக கட்டண வரி தொடர்பான ஒரு விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது.
இப்போது நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களின் இயக்கத்திற்கும் ஃபாஸ்டேக்கை (Fastag) அவசியமாக்க ஒரு புதிய வழி செய்யப்பட்டுள்ளது.
இனி, யாருடைய வாகனங்களில் சரியான ஃபாஸ்டாக் உள்ளதோ, அவர்களுக்கு மட்டுமே, 24 மணி நேரத்தில் திரும்பி வந்தால் டோல் வரியில் (Toll Plaza Discount) கிடைக்கும் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அரசாங்கம் இப்போது ஒரு விதியை உருவாக்கியுள்ளது. அதாவது, நீங்கள் பணம் செலுத்தி சுங்க வரி (Toll Tax) செலுத்தினால், 24 மணி நேரத்தில் நீங்கள் திரும்பி வரும் பட்சத்தில் உங்களுக்கு டோலில் வரி விலக்கு கிடக்காது.
ஃபாஸ்டேக் இருந்தால் மட்டுமே டிஸ்கௌண்ட்
மேலும், பல டோல் டேக்ஸ்களில் சில சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சில வாகனங்களுக்கு டிஸ்கௌண்டாக டோல் டாக்ஸ் வாங்கப்படுவதில்லை. ஆனால், இனி, அந்த வாகனங்களிலும் ஃபாஸ்டாக் இருந்தால் மட்டுமெ டிஸ்கௌண்ட் கிடைக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு, ஃபாஸ்டாக் அல்லது வேறு விதமான ப்ரீபெய்ட் கருவிகள் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே சலுகைகள் கிடைக்கப்பெறும்.
ஒரு நபர் 24 மணி நேரத்திற்குள் திரும்பி வரும் சூழலில் இந்த மாற்றம் பயனளிக்கும் விதத்தில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், தள்ளுபடி பெற முன்கூட்டியே எந்த ரசீதையும் எடுத்து வர வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் 24 மணி நேரத்திற்குள் திரும்பினால், அவரது ஃபாஸ்டாக் கணக்கிலிருந்து டிஸ்கௌண்டிற்குப் பிறகான கட்டணம்தான் கழிக்கப்படும்.
ALSO READ: இனி லேசான பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்..!