ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit) என்பது ரிஸ்க் இல்லாத முதலீடு. மாதந்தோறும் முதலீடு செய்யும் உங்கள் தொகைக்கு, வங்கிகள் வட்டி வழங்கும். அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான வட்டி வழங்கப்படாது என்பதால், நீங்கள் இந்த சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு முன்பு அனைத்து வங்கிகளிலும் வழங்கப்படும் வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக, ரெக்கரிங் டெபாசிட்டின் சாதக, பாதங்களை தெரிந்து கொண்டால், இந்தக் கணக்கை தொடங்கலாமா? வேண்டாமா? என்ற ஐடியா உங்களுக்கு கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாதக அம்சங்கள்


மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீட்டுக்கு எடுத்து வைத்துவிட வேண்டும். இதனால், உங்களுக்கு நிதி ஒழுக்கம் ஏற்பட்டுவிடும். முதலீட்டு தொகையை கழித்து, பின்னர் கையில் இருக்கும் தொகையைக் கொண்டு மாத செலவுக்கு கணக்கிட தொடங்குவீர்கள். ஒரு மாதம் தவறினால் அபராதம் கிடையாது. தொடர்ச்சியாக 4 மாதங்கள் தவணை செலுத்த தவறினால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மிக முக்கியமான விஷயம், ரெக்கரிங் டெபாசிட் கணக்கு தொடங்குவது எளிது. குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து சேமிப்பை தொடங்கலாம்.


ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி! யாருக்கு பலன் கிடைக்கும்


பாதகமான காரணிகள்


ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமிப்பு திட்டத்துக்காக செலவிட வேண்டியிருக்கும் என்பதால், சில இக்கட்டான சமயங்களில் அது உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். அதேநேரத்தில் இடையில் முதலீட்டு தொகையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. முதிர்வு காலம் எட்டுவதற்கு முன்பு இடையிலேயே பணம் எடுத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் முதலீடு செய்திருக்கும் திட்டம் வழங்கும் பலன்கள் கிடைக்காது.


ALSO READ | PNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு Big News, லட்சங்களில் உடனடியாக கடன் கிடைக்கும்


கூடுதல் அம்சங்கள்


ரெக்கரிங் டெபாசிட்டில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை, முதிர்வு காலத்தை எட்டியவுடன் வங்கியில் வட்டியுடன் வரவு வைக்கப்படும். மேலும், இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கும் கிடைக்கும். ஒருவேளை முதிர்வு காலத்துக்குப்பிறகும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக்கொள்ளும் வசதி உண்டு. குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சில வங்கிகள் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR