தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பவர் பாண்டி படத்தை அடுத்து இவர் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும், காதலர் தின வெளியீடாக உலவிரவு என்ற ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்து உள்ளார். 


இந்நிலையில், அண்மையில் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு விருது விழாவில் சூப்பர் மகள் என்கிற பெயரில் ஒரு விருது கொடுக்கப்பட்டது. அதில் டிடி, உத்ரா உன்னி, வரலட்சுமி சரத்குமார் மூவருக்கும் விருது வழங்கப்பட்டது.


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தொகுப்பாளி டிடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் என்னுடைய அம்மாவை கௌரவம் செய்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.