வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, தினமும் 6 மணி நேரம் பணி நேரமாக அறிவிக்‍க, அந்நாட்டுப் பிரதமர் சன்னா மரின் பரிந்துரை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகிலேயே மிகவும் இளம் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்.இவர் வயது 34.அவரது அமைச்சரவையில் மொத்தம் உள்ள 19 பேரில் 12 பேர் பெண்கள்,அவருடைய நிதி அமைச்சர் வயது 32 தான்.  


பின்லாந்தில் தற்போது வாரத்தில் 5 பணி நாட்கள், 8 மணி நேர வேலை என்ற திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், இனி வாரத்தில் 4 நாட்கள், தினமும் 6 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக அறிவிக்கும் பரிந்துரையை சன்னா மரின் முன்வைத்துள்ளார். இதன்மூலம் நாட்டு மக்கள் தங்களது நேரத்தை குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள், பொழுதுபோக்கிற்கும், மற்றும் கலாச்சாரம் போன்ற பிற அம்சங்களுடன் அதிக நேரம்  செலவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  


பின்லாந்து பிரதமரின் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இந்தியாவில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.