அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (CPSC) சமீபத்தில் தனது வருடாந்திர புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியிலை பார்த்த அனைவருக்கும் ஒரு வினோதமான விஷயம் காத்திருந்த்து.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்... CPSC அறிக்கையில் அதிகாரிகள் எத்தனை புகார்களை சரி செய்தனர் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அதில் ஒன்று, அமெரிக்க மனிதர் ஒருவரின் ஆணுறுப்பினை கார் பால் பேரிங்கில் (Car Ball Bearing)  இருந்து மீட்டது தான்... 


"வழக்கத்திற்கு மாறான பாலியல் பொம்மை"-யின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவர் மருத்துவர்களை அனுக வேண்டி நேர்ந்துள்ளது. மருத்துவர்களும் கடும் முயற்சிக்கு பின்னர் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். 


சுமார் ஒரு மணி நேர போராட்டதிற்கு பின்னர் பொம்மையில் சிக்கிக்கொண்ட ஆணுறுப்பினை தீயனைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டெடுத்துள்ளனர். 


இச்சம்பத்தில் சிக்கிய மணிதர் 50-லிருந்து 60 வயதிற்கு உட்பட்டவராக இருந்தார் என தகவல்கள் தெரிவிக்கிறது. 


அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், இந்த விஷயம் மட்டும் இல்லை.. மேலும் பல உள்ளது!... மனித தொண்டையில் சிக்கிய கம்பிகள் அகற்றம், மூக்கு, காது துவாரத்தில் சிக்கிய கம்பி அகற்றம் போன்ற மேலும் பல செயல்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.