நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த 5 விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்..!
Happy Life Tips : நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் உங்களின் தினசரி பழக்க வழக்கங்களில் கட்டாயம் 5 விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
Happiness tips : சிலரை பேரை பார்க்கும்போது எப்படி இவர்கள் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்? என்ற கேள்வி இயல்பாக எழும். அவர்கள் இயல்பாக இருப்பார்கள், எல்லோரிடமும் மகிழ்ச்சியாக பழகுவார்கள், வார்த்தைகள் ஒவ்வொன்றும் மென்மையாக இருக்கும். அதேநேரத்தில், அவர்களைப் போல் நம்மால் ஏன் இருக்க முடியவில்லை? என்ற கேள்வியும் நம்மில் எழும். இதற்கு விசேஷ காரணங்கள் எல்லாம் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள், அதனால் அந்த விஷயங்களை தங்களின் பழக்கமாக மாற்றிக் கொண்டார்கள். நாம் அதனை செய்கிறோமா? என சிந்திக்க வேண்டும். அவர்களைப் போலவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
செய்யும் வேலையில் கவனம்
மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் உங்களுக்கான அன்றாட வேலைகளை எல்லாம் சரியாக செய்துவிடுங்கள். இதனை சரியாக செய்தாலே உங்களுக்குள் பயம், பதட்டம் இருக்காது. திசை திருப்பும் விஷயங்களில் கவனத்தை இழந்துவிடாதீர்கள். அது உங்களை தவறான பாதைக்கு வழிநடத்திச் செல்லும். அதனால் எப்போதும் நல்ல விஷயங்கள் எதுவோ அதில் முழுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். கூடவே, உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். சுற்றுலா செல்வது, பாடல் பாடுவது என பொழுதுபோக்கை ரசித்து செய்யுங்கள்.
அன்பாக நடந்து கொள்ளுதல்
எப்போதும் அன்பான வார்த்தைகளை பேசுங்கள். பிறரிடம் பயன்படுத்தும் வார்த்தைகள் எப்போதும் அன்பானவையாக இருக்க வேண்டும். சிரித்த முகத்துடன் பேசி பழக வேண்டும். அது புதிய மனிதர்களாக இருந்தாலும் சரி, ஏற்கனவே தெரிந்த முகமாக இருந்தாலும் சரி. இன்முகத்துடன் நீங்கள் பேசி பழகும்போது உங்கள் மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே உங்களின் இயல்பாகவும் மாறிவிடும்.
உறவுகளுடன் நேரம் செலவழித்தல்
உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் நேரம் செலவழியுங்கள். ஒரே ஒருவருடன் இருப்பதைக் காட்டிலும் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என அடிக்கடி அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் பேசும்போதெல்லாம் அன்பாக இருக்கவும். ஒருபோதும் உங்கள் வாயில் இருந்து காயப்படுத்தும் சொற்கள் வந்துவிடவே கூடாது. சிறிய சொற்கள் என்றாலும் அந்த சூழலை கடினமாக்கும் என தெரிந்தால் அதனை பயன்படுத்துவதை தவிர்த்துவிடவும். உடனே ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக தவறான வார்த்தைகளை அவசரப்பட்டு விட்டுவிட வேண்டாம்.
மேலும் படிக்க | வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!
பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்
எப்போதும் உடனிருப்பவர்களையும், நண்பர்களையும் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் செய்யும் சிறிய செயல்களுக்கும் உச்சிமுகர்ந்து பாராட்டுங்கள். குழந்தைகள் என்றால் தயங்காமல் பாராட்டி மகிழ வேண்டும். உங்களின் பாராட்டு அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும். விமர்சனம் என்ற பெயரில் அவர்களின் செயல்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. அந்த நொடியில் பாராட்டிவிட்டு, பின்னொரு நாளில் இப்படி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அதனால் அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செய் என்று ஊக்கப்படுத்தும்படி சொன்னீர்கள் என்றால் நீங்கள் பாராட்டுபவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவார்கள்.
நன்றியோடு இருத்தல்
நமக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றியோடு இருப்பது அவசியம். எக்காரணத்தைக் கொண்டும் அவர்களின் செயலை குறைத்து மதிப்பிட்டுவிடவோ அல்லது அங்கீகரிக்காமலோ இருந்துவிடாதீர்கள். உங்களின் நன்றி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதும் மட்டுமின்றி உங்கள் மீதான நன்மதிப்பையும் உயர்த்தும். இது உங்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறப்பான விஷயம். இதனையெல்லாம் நாளும் பின்பற்றி வந்தால் அவையே உங்களின் இயல்பான பழக்கமாக மாறிவிடும். இதனால் நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
மேலும் படிக்க | நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ