மளிவு விலை விமான சேவை நிறுவனமான IndiGo, புத்தாண்டு சலுகையாக வெளிநாட்டு பயணச்சீட்டு விலையில் அதிரடி விலைகுறைப்பு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகை விற்பனையில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் விலை ₹ 3,299 முதல் துவங்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று துவங்கும் இந்த 5 நாள் சலுகை விற்பனை, வரும் டிசம்பர் 16-ஆம் நாள் வரை நடைபெறுகின்றது. 


இந்த சலுகையினை பயன்படுத்த விரும்பும் பயணிகள் டிசம்பர் 16, 2018 - ஏப்ரல் 15, 2018 ஆகிய நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களில் பயன்படுத்திக்கொள்லாம் என IndiGo தெரிவித்துள்ளது.



IndiGo-வின் இந்த ₹ 3,299 சலுகையானது இடைநில்லா விமானங்களில் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த சலுகையானது மற்ற பிற சலுகைகளுடன் சேர்ந்து பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IndiGo நிறுவனமானது தற்போது 63 விமான நிலையங்களுக்கு 1,200 விமானங்கள் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றது. இதில் 49 விமான நிலையங்கள் உள்ளூர் விமான நிலையங்கள் ஆகும், இதர 14 வெளிநாட்டு விமான நிலையங்கள் ஆகும்.