Flipkart Big Billion Days Sale 2023 வாடிக்கையாளர்களுக்கு பல அற்புதமான சலுகைகளுடன் தொடங்க உள்ளது. அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் ஒரு வார விடுமுறை விற்பனையில், பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களில் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வெளியிட பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.  பல்வேறு சாதனங்களுக்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் Flipkart Big Billion Days Saleல் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் நியாயமான விலையில் ஸ்மார்ட்போன்களைப் பெறலாம் மற்றும் கூடுதல் ஆபர்களாக கிரெடிட் கார்டு/டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.  எனவே, நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் கம்மியான விலையில் வாங்க வாய்ப்பு இப்போது உள்ளது. Nothing Phone 1, Samsung Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5, Pixel 7 மற்றும் Oppo Reno 10 Pro 5G உள்ளிட்ட எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்ல் அதிக தள்ளுபடியில் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பழைய ஸ்மார்ட்போன் இருந்தா தூக்கி வீசிராதீங்க... நல்ல வருவாய் வரும் ஒரு வழி இருக்கு


Samsung Galaxy F13, Moto G32, Vivo V29e, Poco M5, Realme 11x 5G மற்றும் Infinix Hot 30 உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.20,000க்கு கம்மியான விலையில் Flipkart Big Billion Days Sale 2023 பல்வேறு பிராண்டுகளில் அருமையான சலுகைகள் மற்றும் சேமிப்புகள் கிடைக்கின்றன.


ரூ.20,000க்கு கீழ் உள்ள சில சிறந்த ஸ்மார்ட்போன்கள்:


Samsung Galaxy F13ன் விலை ரூ.14,999ல் இருந்து ரூ.9,199 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F04 க்கான விலை ரூ. 11,499 முதல் ரூ. 6,499 குறைக்கப்பட்டுள்ளது.
Realme C55 விலை ரூ.12,999க்கு பதிலாக ரூ.9,499க்கு விற்பனை.
Realme 10 Pro 5G ஆனது ரூ.15,999 விலையில் வழங்கப்படுகிறது.
Realme 11x 5Gக்கான விலைக் குறைப்பு ரூ. 16,999 முதல் ரூ. 14,999 ஆகும்.
Moto G32 இப்போது குறைந்த விலையில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.
Moto G14 இப்போது ரூ.12,999க்கு பதிலாக ரூ.8,999க்கு கிடைக்கிறது.
Oppo A17K விலை ரூ.10,999 இருந்து ரூ. 7,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


ஐபோன் ஆபர்கள்:


நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டிருந்தால் Flipkartல் இந்த ஃபோன் பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது, மேலும் நீங்கள் உங்கள் கார்டுகளை பயன்படுத்தி ஆப்பரில் ரூ. 40,000 வரை கூட பெறலாம்.  ஐபோன் 13 தற்போது இந்தியாவில் Flipkartல் வெறும் 52,999 ரூபாய்க்கு கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. நீங்கள் Flipkart Axis Bank கார்டை வைத்திருந்தால், ஏற்கனவே குறைக்கப்பட்ட இந்த விலையில் கூடுதலாக 5% தள்ளுபடியைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.30,000 வரை கணிசமான தள்ளுபடியைப் பெறலாம். உதாரணமாக, உங்களிடம் iPhone 12 அல்லது நன்கு பராமரிக்கப்பட்ட Samsung சாதனம் இருந்தால், சாதனத்தின் நிலை பொறுத்து நீங்கள் சுமார் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இது ஐபோன் 13ன் விலையை ரூ.40,000க்குள் குறைக்கலாம்.


மேலும் படிக்க | Amazon Great Indian Festival: Apple iPhone 14-ஐ 23,249 ரூபாய்க்கு பெறுங்கள்! எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ