வழிமுறைகள் : பான் கார்டே வேண்டாம்... CIBIL Score-ஐ ஈஸியா செக் செய்யலாம் - இதை பண்ணுங்க!
How To Check CIBIL Score Without Pan Card : உங்களின் சிபில் ஸ்கோரை பான் கார்டு (Pan Card) இல்லாமலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இதில் காணலாம்.
How To Check CIBIL Score Without Pan Card: சிபில் (Credit Information Bureau India Limited - CIBIL) என்ற நிறுவனம் நீங்கள் வாங்கிய கடன் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தியது ஆகியவற்றை ஆய்வு செய்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரேட்டிங் அளிக்கும். அந்த ரேட்டிங் தான் சிபில் ஸ்கோர் (CIBIL Score) என்றழைக்கப்படுகிறது. சிபில் ஸ்கோர்தான் இந்தியாவில் கடன் வழங்குவதில் அதிகம் கவனிக்கப்படும் ரேட்டிங் ஆகும். இந்த சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். இதன் மூலமே, ஒருவருக்கு அளிப்பது குறித்த நம்பகத்தன்மை வரையறுக்கப்படும்.
அதாவது நீங்கள் ஒரு வங்கியிடமோ அல்லது நிதி நிறுவனத்திடமோ நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோரை நல்ல நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். அதிகமாக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவருக்கே கடன் எளிதாக கிடைக்கும். ஒருவர் கடன் வாங்கி அதனை பொறுப்பாக குறித்த தேதியில் திருப்பிச் செலுத்திவிட்டார் எனில் அவருக்கு நல்ல சிபில் ஸ்கோர் இருக்கும். சிபிஎல் ஸ்கோரை மனதில் வைத்தே பலரும் தங்களின் நிதி குறித்த திட்டமிடல்களை மேற்கொள்கொள்கிறார்கள்.
பான் கார்ட் இல்லாமல்...
எனவே, 700க்கும் மேல் சிபில் ஸ்கோரை வைத்திருப்பதே நல்லதாகும். அப்படி நீங்கள் வைத்திருந்தால் நீங்கள் வங்கியிடமோ அல்லது நிதி நிறுவனங்களிடமோ கடன் கேட்கும் போது உங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அடிக்கடி கடன் வாங்குவது, பல இடங்களில் கடன் வாங்கியிருப்பதும் வாங்க விண்ணப்பித்திருப்பதும் என பல விஷயங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே, உங்களின் ஒவ்வொரு இஎம்ஐ, கடன் பரிவர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ளும்போதும் சிபில் ஸ்கோரை சரிபார்ப்பது நல்லது.
நீங்கள் கூகுள் பே, போன்பே, பேடீஎம் என பல செயலிகள் மூலம் சிபில் ஸ்கோரை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இவை அனைத்திற்கும் உங்களின் பான் கார்ட் எண் அவசியமாகும். ஒருவேளை பான் கார்ட் இல்லாவிட்டாலும் உங்களின் சிபில் ஸ்கோரை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம். அதுகுறித்து இதில் காணலாம்.
வழிமுறைகள் இதோ
- முதலில் CIBIL இணையத்தளத்திற்கு செல்லுங்கள். அதில் Personal CIBIL Score என்ற ஆப்ஷனில் இருக்கும் Get your free CIBIL score என்பதை கிளிக் செய்து இலவசமாக சரிபாருங்கள்
- இந்த லிங்கை கிளிக் செய்து உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளுங்கள். இதில் பாஸ்வேர்ட் செட் செய்துகொள்ளவும்.
- அதில் உங்களின் முழு பெயரை கொடுத்துவிட்டு, பான் கார்டை தவிர்த்து பிற அரசு சான்றிதழான பாஸ்போர்ட், வாக்களர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம்.
- உங்களின் பிறந்த தேதி, மாநிலம், பின்கோட் ஆகியவற்றை உள்ளிடவும். மொபைல் நம்பரை உள்ளிட்டு, Accept and Continue என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் மொபைல் நம்பரை கொடுத்தவுடன் அந்த மொபைலுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி நம்பரை அதில் உள்ளிட்டு, Continue என்பதை கிளிக் செய்யவும்.
- இந்த சாதனைத்தை கணக்குடன் இணைக்க வேண்டுமா என கேள்வி எழுப்பப்படும். அதாவது, CIBIL இணையதளம் என்பது முறையான லேப்டாப் அல்லது மொபைலில் இருந்து அணுகப்படுகிறதா என்பதை சரிபார்க்க இந்த கேள்வி கேட்கப்படும். இதற்கு ஆம் என்றால் Yes கொடுக்கப்படும். நீங்கள் வேறு ஒருவரின் மொபைலையோ, லேப்டாப்பையோ, பொது இடத்தில் கணினியையோ பயன்படுத்தினால் No கொடுத்து, Continue கொடுக்கவும்
- 'You Have Successfully Enrolled' என்ற செய்தி உங்களின் திரையில் காட்டப்படும்.
- தொடர்ந்து, Login பக்கத்தில் உங்களின் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து, Go To Dashboard என்பதை கிளிக் செய்து சிபில் ஸ்கோரை சரி பார்க்கலாம்.
மேலும் படிக்க | Firefox பிரவுசர் யூஸ் பண்றவங்க எல்லாம் உஷாரு! அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ