மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தம்பதிகள் செய்யக் கூடாத ’4’ தவறுகள்
திருமணம் ஆன புதிதில் சந்தோஷமாக போகும் வாழ்க்கை, சிலருக்கு நாள் செல்ல செல்ல கசப்பான உறவாக மாறுகிறது.
திருமணம் ஆன புதிதில் சந்தோஷமாக போகும் வாழ்க்கை, சிலருக்கு நாள் செல்ல செல்ல கசப்பான உறவாக மாறுகிறது. அதற்கு தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில தவறுகள் காரணமாகின்றன. உறவு முறிவிற்கு காரணமாக சில பொதுவான தவறுகளை பற்றி தெரிந்து கொண்டால், திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
அந்தரங்க விஷயங்களில் தலையிடுதல்
தம்பதிகள் ஆனாலும், ஒன்றாக வாழ்பவர்கள் ஆனாலும், ஒவ்வொருவருக்கும் அந்தரங்கம் என்ற ஒரு விஷயம் இருக்கும். அதில், யாராக இருந்தாலும், அது வாழ்க்கை துணையாக இருந்தாலும் அவர்கள் தலையிடுவதை சிலர் விரும்புவதில்லை. உங்கள் வாழ்க்கை துணையின் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் கேட்கக்கூடாது. அவருடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அறிய முயற்சிக்கக்கூடாது. இது உறவில் பிரிவை ஏற்படுத்தும்
சந்தேகம்
சந்தேகம் என்பது உறவை அழிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று. உங்கள் வாழ்க்கை துணையை தேவையின்றி சந்தேகிப்பதை தவிர்க்க வேண்டும், இதன் காரணமாக, பல நல்ல உறவுகள் கூட உடைந்து விடுகின்றன. உங்கள் வாழ்க்கை துணை எங்கு செல்கிறார், அவர் யாரைச் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது, அவரது தொலைபேசியை எடுத்து, யாருடன் பேசினார் என பார்ப்பது, அவருக்கு வந்த மெஸ்சேஜ்களை படிப்பது போன்றவை உங்களை பற்றிய தவறான எண்ணத்தை விதிக்கும். இந்த விஷயங்கள் அனைத்தும் சந்தேகம் ஏற்படுவதால் செய்யும் செயல்கள் என்பதால், இந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
ALSO READ நரை முடி பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு தரும் சில வீட்டு வைத்தியங்கள்
பணம்
பலருக்கு தங்கள் வாழ்க்கைத் துணையின் பணம் சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காணப்படுகிறது. உங்கள் வாழ்க்கை துணையின் சம்பளம், அவரிடம் எத்தனை பணம் உள்ளது என்பதை கேட்பது அவ்வளவு நாகரீகமான செயல் அல்ல. அவராக சொல்லாதவரை நீங்கள் அதைப் பற்றி அவரிடம் கேட்பது நல்லதல்ல. பணத்தின் காரணமாகவும் பெரும்பாலான உறவுகள் பிரிந்து செல்கின்றன.
கோபம்
கோபப்படுவது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. பல சமயங்களில் பலர் தங்கள் அலுவலக கோபத்தை, வீட்டில் காட்டும் வழக்கம் உள்ளது. உங்கள் வாழ்க்கை துணையை ஒரு வடிகாலாக பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த விஷயங்கள் தினமும் நடக்கத் தொடங்கும் போது இந்த மனக்கசப்பு உங்கள் உறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கோபம் அதிகமாக இருந்தால் உங்கள் துணையுடன் பேசாமல் இருப்பது ஒரு சிறந்த வழி.
ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR